தொட்டதெல்லாம் துலங்கும் அபிஜித் நட்சத்திர நேரம்

அபிஜித் நட்சத்திரம்

வெற்றி, முன்னேற்றம், செல்வம் இவற்றை அடைய சிறந்த நேரம் அபிஜித் நட்சத்திர நேரமாகும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பழங்காலத்தில் முதல் நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம் தான். இது அனைவரும் அறியாத ரகசிய உண்மை. 28 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரம் இருந்திருக்கிறது. இந்த அபிஜித் நட்சத்திரம் பிரம்ம முகூர்த்ததிற்கு நிகரான சக்தி கொண்டது.

ஸ்ரீமத் பகவத் கீதையில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம், நான் நட்சத்திரங்களில் அபிஜித் என்று கூறுகிறார். இதுவே இந்த நட்சத்திரத்தின் மகிமையைக் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அபிஜித் நட்சத்திர நேரம்

அபிஜித் நட்சத்திர நேரம் எப்போது வருகிறது

அபிஜித் நட்சத்திர நேரம் தினமும் வருகிறது. பிரம்ம முகூர்த்தம் சூரிய உதயத்திற்கு முன்பு வருவது போல, சூரிய உதயம் நிகழ்ந்த பின் ஆறு மணி நேரம் கழித்து வருவது தான் அபிஜித் நேரம். இதனை உச்சி வேளை என்று நாம் வழக்கத்தில் கூறி வருகிறோம். 12 மணிக்கு உச்சி வேலை ஆரம்பம் ஆகிறது அல்லவா? எனவே 12 மணி முதல் 12:30 மணி வரையிலான காலம் அபிஜித் நேரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒரு சிலர் பகல் 11.45 – லிருந்து 12.15 மணி வரை உள்ள நேரம் அபிஜித் நேரம் என்றும் கூறுகின்றனர்.

தோஷம் இல்லாத நேரம்

நட்சத்திரத்தை வைத்தே முகூர்த்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முகூர்த்த நேரமும் தோஷம் இல்லாத நேரமாக பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் அபிஜித் நட்சத்திரமும் தோஷம் இல்லாத நேரத்தை கொண்டிருக்கிறது. சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் அதற்கு பதில் அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள். ‘ஜித்’ என்றால் வெற்றி பெறுதல் என்று பொருள். ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது பொருளாகும்.

அபிஜித் நேரத்தின் சிறப்புகள்

முனிவர்களும் ரிஷிகளும், இந்த நட்சத்திரத்தில் காரியங்களை தொடங்கி அதில் வெற்றி பெற்றுள்ளனர். அபிஜித் நேரம் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தபொழுது அதற்கு அவ்வளவாக சக்தி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் வானியல் மாற்றத்தால் அது தனித்து பிரிந்து போன போது அதிகப்படியான சக்திகளைப் பெற்றதாம். இதனை அறிந்த ரிஷிகளும், முனிவர்களும் தங்களது சக்தியை பெருக்கிக்கொள்ள அபிஜித் நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் ஜெயம் கிடைக்கும். அதே போல் அபிஜித் நட்சத்திரத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். பழங்கால ஜூலியன் காலண்டர்களில் அபிஜித் நட்சத்திரம் முகூர்த்த குறியீடுகள் மூலம் குறியிடப்பட்டிருப்பது இதை உறுதி செய்வதாக உள்ளது.

அபிஜித் நட்சத்திர குறியீடு

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு குறியீட்டை கொண்டு குறிப்பிடபடுகிறது. அதே போல இந்த அபிஜித் நட்சத்திரத்திற்கும் ஒரு குறியீடு உள்ளது. நான்கு பாதைகளை ஒன்றிணைக்கும் நாற்சந்தி வடிவத்தை கொண்டது. இந்த நான்கு பாதைகள் நான்கு வேதங்களையும் குறிக்கிறது. தர்ம நெறியில் வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும் என்று பொருள்.

அபிஜித் நட்சத்திரத்தின் வடிவம்

எந்த தோஷமும் அண்டாத நேரம்

அபிஜித் நட்சத்திர நேரத்தில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும். இந்த நேரத்தில் எந்த தோஷமும் கிடையாது. ராகுகாலம், எமகண்டம், குளிகை, அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த சகுன தடங்கலும் இல்லை. இந்த நேரத்தில் புது முயற்சி தொடங்குதல், சொத்துக்கள் வாங்க கையெழுத்து போடுதல், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்றவைகளுக்கு இந்த நட்சத்திர நேரம் மிகவும் உகந்தது என்கிறது ஜோதிட சாஸ்திரம். முகூர்த்த நேரம், நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், பிரம்ம முகூர்த்தம் போன்ற நல்ல நேரங்களின் வரிசையில் அபிஜித் நேரமும் உள்ளதால் இந்த நேரத்தில் செய்யும் சுபகாரியங்கள் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும். இது மனித கண்களுக்கு அவ்வளவு எளிதில் தெரிந்து விடாது. ஆனால் இந்த நட்சத்திரத்தை பார்த்துவிட்டால் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி தான்.

அபிஜித் நட்சத்திர நேரத்தில் அர்த்தநாரீஸ்வரரின் அம்சமாக விளங்கும் திருநங்கைகளுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து அவர்களிடமிருந்து பத்து ரூபாய் பெற்றாலும் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. முக்கிய நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து அபிஜித் நட்சத்திரம் பிரிந்து இருந்தாலும் அதற்குரிய சக்திகள் தினமும் பெருகி கொண்டே தான் இருக்கிறது என்று வானியல் சாஸ்திர நிபுணர்கள் கூறியுள்ளனர்.

புராணங்களில் இறைவனுக்கு கூட அபிஜித் நேரத்தில் வெற்றி தந்ததாக வரலாறுகள் உள்ளன. ரிஷிகளும், முனிவர்களும் மட்டுமல்லாமல் தேவர்களும், தெய்வங்களும் கூட இந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். அவர்களால் படைக்கப்பட்ட மனிதர்களும் அபிஜித் நேரத்தை சரியாக பயன்படுத்தினால் ஈடுபடும் அனைத்து காரியத்திலும் வெற்றி பெறலாம்.

அபிஜித் நட்சத்திர பரிகார கடவுள்

அபிஜித் நட்சத்திரத்கென்று தனியாக பரிகார கடவுள் யாரும் இல்லை. உத்திராடம் 4-ம் பாதம் திருவோணம் 1-ம் பாதங்களில் பிறந்தவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள். உத்திராடத்துக்கு கணபதி, திருவோணத்துக்கு திருமால், இவர்களை வணங்கினால் போதுமானது. உத்திராடம் 4-ம் பாதம் திருவோணம் 1-ம் பாதங்களில் பிறந்தவர்கள் வெற்றியாளர்களாக, தோல்வியைக் கண்டு துவளாதவர்களாக இருப்பார்கள்.

அபிஜித் நட்சத்திரத்தின் பரிகார கடவுள்

அபிஜித் நட்சத்திர திருத்தலம்

அபிஜித் நட்சத்திரத்தை ஸ்ரீகிருஷ்ணர் சூடிக் கொண்டு முதன் முதலாக காட்சி அளித்த திருத்தலம் திருக்கண்ணபுரம். அங்கு சென்று வழிபடுவது நலம் அளிக்கும். அங்கு அமாவாசை தின அபிஜித் நட்சத்திர காலத்தில், அபிஜித் நட்சத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு பெருமாள் நடையழகுக் காட்டி சேவை சாதிக்கும் வைபவம் நிகழ்ந்து வருகிறது. முடிந்தவர்கள் சென்று தரிசிக்கலாம். இதனால் நிச்சயம் உங்கள் வாழ்வில் வெற்றிகளும் மங்கல நிகழ்வுகளும் கைகூடும் என்பது ஐதீகம்.

எந்த கிழமையில் வேண்டினால் என்ன கிடைக்கும்

திங்கட்கிழமை அபிஜித் நேரத்தில் நல்ல வேலை அமையவும், மேலதிகாரிகளின் தொந்தரவு குறையவும் வேண்டிக்கொள்ளலாம்.

செவ்வாய்கிழமை அபிஜித் முகூர்த்த நேரத்தில் வீடு யோகம் அமையவும், கடன் தீரவும் வேண்டிக்கொள்ளலாம்.

புதன்கிழமை அபிஜித் முகூர்த்த நேரத்தில் குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் வேண்டிக்கொள்ளலாம்.

வியாழக்கிழமை அபிஜித் நேரத்தில் வெளிநாடு செல்லும் யோகமும், கல்வியில் மேன்மையும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை அபிஜித் முகூர்த்த நேரத்தில் திருமணம் நடக்கவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் வேண்டிக்கொள்ளலாம்.

சனிக்கிழமை அபிஜித் முகூர்த்த நேரத்தில் வேண்டினால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும்.

ஞாயிறு அபிஜித் முகூர்த்த நேரத்தில் வேண்டினால் வினைகள் அகலும், உடல் நலம் மேம்படும்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன் திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார...
ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில்...
தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.