பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா?

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால் நல்ல சகுனம் என பெரியோர்கள் கூறுவார்கள். பல்லி நம் உடலின் மீது விழும் இடத்திற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

பல்லி விழும் தோஷம்

நம் தினசரி பயன்படுத்தும் கலேண்டர்களில் பல்லி விழும் பலங்கள பற்றி போடப்பட்டிருப்பதை பற்றி பார்த்திருப்போம். சில சமயங்களில் நம் மீது பல்லி விழுந்தால் அதற்கான பரிகாரங்களை செய்கிறோம். ஆனால் நமக்கே தெரியாமல் சில சமயங்களில் பல்லி நம் மீது விழும். பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் தோஷத்தை எப்படி நிவர்த்தி செய்வதென பின்வருமாறு பார்ப்போம்.

தங்க பல்லி, வெள்ளி பல்லி

ஸ்ரீ சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு மைந்தர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு நாள் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வரச் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்ட கௌதம முனிவர் கடும் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டாராம். பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்தி வேண்டிக்கொண்டதால் காஞ்சி சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு எனக் கூறினார் முனிவர்.

பிறகு அந்த சிஷ்யர்கள் இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு பெருமாளிடம் மோட்சம் வேண்டி கேட்டனர். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் உங்களின் ஆத்மா மட்டும் வைகுந்தம் செல்லும். உங்களின் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி ஷேமம் உண்டாகும் என்று கூறினாராம். சூரிய, சந்திரன் இதற்குச் சாட்சி என்று கூறி அவர்களுக்கு மோட்சம் அளித்தாராம்.

பல்லி விழுந்தால் என்ன தோஷம்

தங்க பல்லி, வெள்ளி பல்லி வழிபாடு

எனவே காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லியை தரிசித்தால் நம் மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்கள், கிரகண தோஷங்கள் அனைத்தும் விலகும்.

அதே போல் பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கும் இக்கோவிலில் உள்ள பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

ஆரோக்கியமான வாழ்விற்கு எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

ஆரோக்கியமான வாழ்விற்கு எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு தூக்கமும் மிக முக்கியமாகும். தூக்கத்தின் முக்கியத்துவத்தை நம்மில் பலரும்...
எந்த ராசிக்கு எந்த ஓரைகள்

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்? மேஷம் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு  நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து...
கண்களை எப்படி பாதுகாப்பது

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில எளிய வழிகள்

கண்களை பரமாரிக்க சில எளிய வழிகள் நம் உடலில் மிகவும் மென்மையான உறுப்பு எது என்றால் அது நம் கண்கள் தான். கண்கள் ஒரு மனித்தனுக்கு மிகவும் இன்றியமையாதது. கண்களால் தான் நம் அனைத்தையும்...
சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ் பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள்...
சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி பொது பலன்கள் – சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி குணங்கள் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதமும் அடங்கியுள்ளன. சிம்ம ராசியானது கால புருஷனின் இதயத்தை...
2ம் எண்ணின் குணநலன்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

2ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 2ம் எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 2ம் எண்ணில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.