கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை

கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட தாவர இனமாகும். மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இது தவிர வெப்ப மண்டலப் பகுதிகள் அனைத்திலும் வளரும் தன்மை கொண்டது.

கற்றாழை மருத்துவ குணங்கள்

கற்றாழையின் வேறு பெயர்கள்

கற்றாழை கத்தளை, சோற்றுக் கற்றாழை, சிறுகத்தளை, குமாரி, கன்னி என பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

கற்றாழையின் அமைப்பு

கற்றாழையானது ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பில், தடிமனான சதையுள்ள இலைகளுடன் காணப்படும். பெரும்பாலான கற்றாழை இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். இது தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும்; கற்றாழையானது சாம்பல் மற்றும் பச்சை வரை நிறத்தில் இருக்கும். தென்னாப்பிரிக்காவில் வளரக்கூடிய சில வகை சோற்றுக் கற்றாழைகள் மரங்கள் போன்று இருக்கும்.

காற்றாழை இலைகளின் நுனியில் சிறு முட்கள் இருக்கும். கற்றாழையின்  இலை, வேர் ஆகியவை மருத்துவப் குணமுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

கற்றாழை இனங்கள்

கற்றாழை இனத்தில், சுமார் 500 இனங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை

1. ஆலோ வேறா – உடல்நல பராமரிப்பு மற்றும் உடல்நல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது

2. ஆலோ அர்போரெசென்ஸ் – உடல்நல பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது

3. ஆலோ அரிஸ்டாட்டா – பந்த செடி, இழை வார் கற்றாழை

4. ஆலோ டிக்கோடோமா – க்வீவர் மரம் அல்லது கோக்கெர்பூம்

5. ஆலோ வெரீகட்டா – கௌதாரி மார்புடைய கற்றாழை, புலி கற்றாழை எனப்படுகிறது.

6. ஆலோ பார்பாடென்சிஸ் – குருத்து கற்றாழை , பொதுவான கற்றாழை , மஞ்சள் கற்றாழை , என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை. இது ஆலோ வேறாவின் பழைய பெயராகும்.

கற்றாழை வகைகள்

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை என பல வகைகள் உள்ளன.

கற்றாழை உடல் நல நன்மைகள்

கற்றாழை வணிக பயன்பாடு

கற்றாழையானது “பார்பலோயின்” மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. கற்றாழையின் “ஜெல்” ஆனது “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு மருத்துவத்தில் வலி நிவாரணியாக பயன்படுகிறது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது. கற்றாழைகளில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை, நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை நல்ல தரம் வாய்ந்தவை.

கற்றாழையில் அடங்கியுள்ள சத்துக்கள்

சோற்றுக்கற்றாழை இலைகளின் கூழ்மத்திலிருந்து (Gel) பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன.

கற்றாழையின் மருத்துவ பயன்கள்

அழகை மேம்படுத்துகிறது

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “கூழ்” (Gel) சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது. சூரிய கதிர்களில் இருக்கும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

தீக்காயம், வெட்டுகாயங்களை ஆற்றுகிறது

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறானது இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

அலங்காரச் செடி

கற்றாழை இனங்கள், அதிகமாகத் தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகச் சட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. கற்றாழை இன செடிகள் மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும். சதைபற்றான தாவரங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் காணப்படும்.

உடல் வனப்பாகும்

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் பளபளப்பாகும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

தாம்பத்திய உறவை சீராக்கும்

சோற்றுக் கற்றாழையின் வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து, இட்லிப் பானையில் தண்ணீருக்கு பதில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு இது மிகவும் சிறப்பான மருந்தாகும்.

தலைமுடி பராமரிப்புக்கு உதவுகிறது

தலைமுடி பராமரிப்பில் முடிகளுக்கு கறுப்பிடவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் பேன் மற்றும் பொடுகு பிரச்சனைகளை நீக்குகிறது.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்

கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

புற்றுநோயை குணமாக்கும்

சோற்றுக் கற்றாழையானது சீறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

கண் பிரச்சனைகளை குணமாக்கும்

கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

சீழ் வடிதல் நிற்கும்

சிறு குழந்தைகளுக்கு ஒரு சில பிரச்சனைகளின் காரணமாக காதுகளில் சீழ் வடியும். அப்படியானவர்கள் கற்றாழையின் மடலை வதக்கி சாறு எடுத்து இருதுளி காதில் விட சீழ் வருவது நிற்கும்.

வயதான தோற்றத்தை தடுக்கும்

தோலிலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் மற்றும் வயோதிக தோற்றம் வராமல் தடுக்கிறது.

சரும பிரச்சனைகளை தீர்க்கும்

முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் போன்ற சரும பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை வளர்ப்பது எப்படி

மலச்சிக்கலை தீர்க்கும்

கற்றாழை மடல் ஒரு துண்டு, ஒரு ஸ்பூன் கடுக்காய்ப் பொடி, சிறிது பனங்கற்கண்டும் சேர்த்து சாப்பிட்டு  வந்தால் நீரடைப்பு, நீர்க்கோவை, மலச்சிக்கல் போன்றவை குணமாகும். பாலில் கற்றாழை சதைத் துண்டுகளை ஊறவைத்து, பத்து நாட்கள் ஒரு சிறிய துண்டு வீதம் சாப்பிட்டு வர ஆசனவாய் எரிச்சல், மூலச் சூடு, சொறி போன்றவை தீரும்.

உடல் சூட்டை குறைக்கும்

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

குளிர்ச்சி கொடுக்கும்

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். சரும திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.

மேலும் எண்ணிலடங்க மருத்துவ பயன்களை கொண்டது கற்றாழை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள்...
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம், விருச்சிகம் விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு விசாகம் நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன் விசாகம்...
பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும்...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...
12 ராசிகள்

உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

  உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்     மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால்,...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.