எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு ஆளாகின்றனர். சிறுவர்களுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டால் விரைவில் கூடிவிடும். அதுவே பெரியவர்களுக்கு ஏற்பட்டால் எலும்பு கூட சில நாட்கள் தேவைப்படும். எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு எவ்வாறான முதலுதவிகள் செய்யவேண்டும் என பின்வருமாறு பார்க்கலாம்.

கை எலும்பு முறிவுக்கான முதலுதவி

கை எலும்பு முறிந்திருந்தால், கையின் இரு பக்கங்களிலும் மூங்கில் குச்சிகள் (தப்பைகள்) வைத்துத் துணியால் கட்டுப்போட வேண்டும். மூங்கில் குச்சிகள் இல்லையெனில், சிறிய மரப்பலகை அல்லது அடி ஸ்கேல்களை வைத்து கட்டுப்போடலாம். முறிந்த எலும்பு அசைவதைத் தடுக்கவே இந்த முதலுதவி. முறிந்த பகுதியில் அசைவு ஏற்பட்டால் அவர்களால் அந்த வலியை தாங்கிக்கொள்ள முடியாது.

எலும்பு முறிவு குணமாக
அடுத்து, முறிந்த எலும்பை தொங்கப்விடக் கூடாது. ஏனெனில், முறிந்த பாகம் தொங்கும் போது, முறிவு ஏற்பட்ட இடத்துக்கு கீழ் ரத்தம் தேங்கி வீக்கமும் வலியும் அதிகமாகும். இதனால், முறிந்த எலும்புகளை நேராக வைத்துக் கட்டுவதில் சிரமம் ஏற்பட கூடும்.

இப்போது, அடிபட்டவரின் முழங்கையை ‘L’ வடிவில் உள்நோக்கி மடக்கி, மார்போடு சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இனி, கழுத்துக்கும் கைக்கும் சேர்த்துத் துணியால் ஒரு தொட்டில் போலக் கட்டுப் போட வேண்டும்.

தொட்டில் கட்டு கட்டும் முறை

ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு துணியை வெட்டிக் கொள்ளுங்கள். அதன் இரண்டு முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டு கொள்ள வேண்டும். பின்பு அதை அடிபட்ட்வரின் கையிலும், கழுத்திலும் மாட்டி தொட்டில் போல தொங்க விட வேண்டும். பின்பு பாதிக்கப்பட்ட நபரை எலும்பு முறிவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இடுப்பு எலும்பு முறிவு, தொடை எலும்பு முறிவு, கீழ்க்கால் முறிவு ஏற்பட்டால்

விளையாடும் போதோ, விபத்தினாலோ, கால் தடுக்கி வழுக்கி விழுந்தாலே இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, கீழ்க்கால் எலும்பு மற்றும் பாத எலும்புகளில் முறிவு ஏற்படலாம். அந்த நேரங்களில் என்ன மாதிரியான முதலுதவிகள் மேற்கொள்ளலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டால்

முதலில் அடிபட்டவரைப் படுக்க வைக்க வேண்டும். கால்களை நேராக நீட்ட வேண்டும். ஓர் அகலமான துணியால் இடுப்பைச் சுற்றிக் கட்டுப் போட வேண்டும். பிறகு, இடுப்புக்குக் கீழே தொடைகள் தொடங்கும் இடத்தில் மற்றொரு கட்டுப் போட வேண்டும். பின் இந்த இரண்டு இடத்தையும் சேர்த்தாற்போல முடிச்சு போட வேண்டும். இந்த முடிச்சு, பக்கவாட்டு பகுதியில் இருக்கும்படி செய்ய வேண்டும்.

தொடை எலும்பு முறிவு ஏற்பட்டால்

தொடை எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டால், துணியின் மடிப்புகளை இரண்டு தொடைகளுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு தொடைகளையும் சேர்த்து மூன்று இடங்களில் கட்டுப் போட வேண்டும்.
இதே போல கீழ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் தொடை எலும்பு முறிவுக்குச் செய்வதைப் போலவே தான் செய்ய வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இடுப்பு, தொடை மற்றும் கால் எலும்பு முறிந்துள்ள நபரை, ஸ்ட்ரெச்சர் கொண்டு தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்த வரை பாதிக்கப்பட்டவரை நடக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால்

பாதங்களின் மீது கனமான பொருள் விழுவது, வழுக்கிவிழுவது, வாகனங்கள் பாதத்தில் ஏறுவது, உயரமான இடத்திலிருந்து விழுவது, விளையாடும்போது விழுவது போன்ற விபத்துகளால் பாத எலும்புகளில் முறிவுகள் ஏற்படலாம்.

எலும்பு முறிவு குணமாக
ஒரு மென்மையான துணியை மடித்து, பாதத்தின் கீழே அணைப்புக் கொடுக்க வேண்டும். அந்தத் துணி அணைப்பை சேர்த்து ஓர் அகலமான பாண்டேஜ் துணியால் பாதம் முழுவதும் கட்டுப் போட வேண்டும்..

பாண்டேஜ் துணியின் முனைகளை ‘8’ போன்ற வடிவத்தில் கணுக்காலின் பின்பக்கமாகக் கொண்டு சென்று, பிறகு முன்பக்கமாகக் கொண்டு வந்து முடிச்சுப் போட வேண்டும். போடப்படும் முடிச்சு பாதத்தின் மேற்புறம் வருமாறு முடிச்சு போட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் எலும்பு முறிந்த பாதத்தைத் தரையில் ஊன்றக் கூடாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
சோமவார விரதத்தின் மகத்த்துவம்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் பலன்கள்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் மகத்துவம்  சிவபெருமானை தினந்தோறும் வழிபடுவது சிறந்தது தான் என்றாலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை தினத்தன்று இறைவனை வணங்குவது பெரும் பாக்கியத்தை கொடுக்கும். தமிழில் திங்கட்கிழமை எனப்படுவதே, வடமொழியில் சோமவாரம் என்று...

மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள் மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த...
தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய் தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச்...
வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

திருமணத்தில் அம்மி மிதித்தல் சடங்கு ஏன் நடத்தபடுகிறது தெரியுமா

திருமணத்தில் அம்மி மிதித்தல் இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு, சம்பிரயதயங்கள் அந்த காலம் முதல் தற்போது வரை வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல சடங்கு சம்பிரதாயம் தற்போது வழக்கில் இல்லா விட்டாலும் முக்கியமான ஒரு...
எலுமிச்சை மருத்துவ பயன்கள்

எலுமிச்சை பழத்தின் எண்ணிலடங்க மருத்துவ குணங்கள்

எலுமிச்சை பழம் எலுமிச்சை ‘ஓசுபேக்’ என்ற தாவரவியற் பெயர் கொண்ட தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இந்த எலுமிச்சை மரம் ருட்டேசி RUTACEAE என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. எலுமிச்சை மரம் வெப்ப மற்றும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.