செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள் 

சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

உணவை மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. இது அதீத பலத்தை தருவதோடு உணவில் இருக்கும் சத்துக்களை வீணாக்காமல் உடலுக்கு சேர்க்கும்.

செரிமான பிரச்சனைக்கு தீர்வு நாம் சாப்பிடும் உணவுகள், சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் அவை நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

செரிமான கோளாறுகள் ஏற்படாமல் நாம்  சாப்பிடும் உணவுகள் நன்கு செரிமானமாகி ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.

செரிமான கோளாறு பாதிப்பின் பொதுவான அறிகுறிகள் 

செரிமான கோளாறு உண்டாக காரணம்

 • வயிறு உப்புதல் மற்றும் அதிக வாயு வெளியேறுதல்
 • மலச்சிக்கல்
 • வயிற்றுப்போக்கு
 • இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல்
 • நெஞ்செரிச்சல்
 • குமட்டல் மற்றும் வாந்தி
 • வயிற்றில் ஏற்படும் வலி
 • உணவை உட்கொள்ளும் போது தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள்
 • எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு
 • குடல் சார்ந்த பிரச்சனைகள்

செரிமான கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள்

 • பாக்டீரியா தொற்று
 • குடல் அழற்சி
 • செரிமான என்ஸைம்களின் குறைபாடு
 • குடலிற்கு செல்லும் இரத்தஓட்டம் குறைவாக இருப்பது.
 • பித்தநீர்க்கட்டி உருவாக்கம்
 • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது
 • மனஅழுத்தம்
 • புகை பிடித்தல்
 • மது அருந்துதல்
 • அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்வது
 • காரமான மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது
 • சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருத்தல்.

செரிமானம் சீராக நடைபெற

 

செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கும் வழி முறைகள்

 • தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, அது உடலில் மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிசெய்கிறது.
 • சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு பிறகு கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
 • தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை குடிப்பதால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவை நீங்கி செரிமானத்திற்கு உதவும்.
 • உணவை நன்றாகக் கடித்து, மென்று சாப்பிடும்போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும். இதனா செரிமானம் சீராக நடைபெறும்.
 • சாப்பிடும்போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருந்தால் அது உணவை நன்கு செரிமானமாக வழிவகுக்கும்.
 • ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்கும் தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால்  உடள் ஆரோக்கியமாக இருப்பதோடு சீராகவும் இருக்கும்.
 • நார்ச்சத்து அதிகம் உள்ள செர்ரி, திராட்சை, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.
 • அதிக எடையுடன் இருப்பது அதிகமான செரிமான கோளாறு மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • உணவுப் பொருட்களில் இஞ்சி, மிளகு, கல், உப்பு, சுக்கு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொண்டால் செரிமான மண்டலத்தின் வேகத்தை அதிகரிக்கும்.
 • தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமான பிரச்சனை எப்போதும் வராது. 

நாம் உணவை எவ்வாறு சாப்பிட வேண்டும் 

 • பொதுவாக சாப்பிடும் பொழுது காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.
 • காலை நாற்காலியில் தொங்கவிட்டு அமரும் போது இரத்த ஓட்டம் கால் பகுதிக்கு அதிகமாக செல்கிறது. இதனால் செரிமானம் தாமதமாகிறது.
 • உணவை சாப்பிடும் போது கவனம் முழுவதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
 • தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினி போன்றவற்றை சாப்பிடும்போது பயன்படுத்த கூடாது. அதனால் கவனம் குறைந்து அளவுக்கு அதிகமாக உணவை எடுத்துக்கொள்ள நேரிடும்.
 • சாப்பிடும் போது பேசக்கூடாது ஏனென்றால், சாப்பிடும் போது வெளியில் இருந்து காற்று வாய் வழியாக உள்ளே செல்லும் இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதனால் தொப்பை உருவாக வாய்ப்பு உள்ளது.
 • நாம் சாப்பிடும் போது, மனதில் வெறுப்பு, வன்மம், கோபம், மன உளைச்சல் என எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் உணவை மட்டுமே கவனித்து உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிடவேண்டும்.
 • இவ்வாறு சாப்பிடும் முறையை பின்பற்றினால் செரிமான பாதிப்புகளும் ஏற்படாது, நம் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....
தசமி திதி

தசமி திதி பலன்கள், தசமி திதியில் செய்ய வேண்டியவை

தசமி திதி தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும்...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
brinjal uses in tamil

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Benefits in Tamil

கத்திரிக்காய் கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.