இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல்

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால் மட்டுமே அனைத்தும் கிடைத்துவிடாது.

நமக்கு கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்டத்தை பக்கத்தில் கொண்டு வரும் ஒரு கருவியாக மட்டுமே ராசிக்கல் செயல்படும். ராசிக்கல் அணிந்தால் ஒரு 10 சதவீதம் அளவிற்கு நன்மைகள் கிடைக்கும்.

ராசிக்கல் பலன்கள் நம் கைவிரல்களில் அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து, கல்வி, தொழில்,திருமண வாழ்க்கை போன்ற அனைத்திலும் முன்னேற நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

இராசிக்கல் அணிவதால் கிரகங்களினால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அவரவர் ராசிக்கும் கிரகங்களுக்கும் ஏற்றவாறு ராசிக்கல் அணிந்தால் தீய சக்தியின் தாக்கங்கள் நம்மை நெருங்காமல் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

ராசிக்கல் என்று சொல்லகூடிய நவரத்தின கற்களுக்கு கிரகக்கோளாருகளை சரி செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. அதனால் தான் கோயில்களில் சுவாமி உருவம் பிரதிஷ்டை செய்யப்படும்போது அதன் அடியில் நவரத்தின கற்களை போட்டு அஷ்டபந்தனம் செய்து அதன் சக்தியை நிலைநிறுத்துகின்றனர்.

அதேபோல் இராசிக்கல்லின் மகத்துவம் குறித்து பண்டைய சங்ககால நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் அரசர்களும், பெரும் செல்வந்தர்களும் தங்கள் கிரீடம், ஆடை ஆபரணங்களிலும் குறிப்பாக மோதிரத்திலும் இராசிக்கல் என்று சொல்லகூடிய நவரத்தினங்களை பதித்து அணிந்ததை நாம் அறியலாம்.

எந்த கிரகத்திற்கு எந்த இராசிக்கல் சிறந்தது

 • சூரியன்- மாணிக்கம்
 • சந்திரன்- முத்து
 • செவ்வாய்- பவழம்
 • புதன்- மரகதம்
 • குரு- புஷ்பராகம்
 • சுக்கிரன்- வைரம்
 • சனி- நீலம்
 • ராகு- கோமேதகம்
 • கேது- வைடூரியம்

ராசிக்கல் ஜோதிடம் இராசிக்கல் எப்படி தேர்வு செய்ய வேண்டும்

 • பிறந்த மாதம்
 • பிறந்த தேதி
 • பிறந்த இலக்கினம்
 • பிறந்த இராசி அதிபதி
 • பிறந்த நட்சத்திர அதிபதி
 • நடைபெறும் மகாதிசை அதிபதி
 • இராசிக்கட்டத்தில் வலு அதிகமான கிரகம்
 • இராசிக்கட்டத்தில் வலு குறைந்த கிரகம்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள்

இராசிக்கல் மோதிரம் அணியும் பலரும், தங்களது இராசிக்கேற்ற கல்லை வாங்கி மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்கின்றனர்.

இராசிக்குரிய இரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வதில் தவறில்லை. அதனால் எந்தவிதமான கெடுதலும் ஏற்படாது.

இராசிக்கற்களை வாங்கும்போது, நல்ல உண்மையான ராசிக்கற்கள் தானா என்று தரம் பார்த்து வாங்க வேண்டும். போலியான ராசிக்கற்களாக இருந்தால் அதை அணிவதால் எந்த பலனும் கிடைக்காது.

நவரத்தின கற்களை நல்ல அனுபவமும், நம்பிக்கையும் வாய்ந்த நபர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் அல்லது பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
பெண் தலை மச்ச பலன்கள்

பெண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் தலை மற்றும் புருவ மச்ச பலன்கள் பெண்ணின் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பேராசை, மற்றும் பொறாமை குணம் இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது. பெண்ணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்கள்...
how to make aval payasam in tamil

அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம் தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – ½ கப் பால் - 2 கப் ஏலக்காய் தூள்  - சிறிதளவு முந்திரிப்பருப்பு – தேவையான அளவு நெய்...
kanavil samiyay kandaal

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள்...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.