பெண் கால் மச்ச பலன்கள்
சாமுத்திரிக லட்சனப்படி ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருந்தால் அவருக்கு என்ன பலன்கள் உண்டாகும் என குறிப்பிடப்பட்டிற்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் பெண் பாதம், மூட்டு, முழங்கால், தொடை போன்ற பகுதிகளில் மச்சம் இருந்தால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.
பெண் பாதம் மச்ச பலன்கள்
பெண்ணின் பாதங்களில் மச்சம் இருந்தால் அவர் ஆச்சார அனுஷ்டானம் உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்ணின் இடது பாதத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் குடும்பத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வார்கள்.
பெண்ணின் வலது பாதத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நல்ல கணவர் வாழ்க்கைதுனையாக அமைவார்.
பெண் முழங்கால் மச்ச பலன்கள்
பெண்ணின் முழங்கால் பகுதியில் மச்சம் இருந்தால் அவர் ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்வார்.
பெண்ணின் இடது முழங்கால் பகுதியில் மச்சம் இருந்தால் அவர் புத்திக்கூர்மை, மற்றும் தன்னம்பிக்கை உடையவராய் இருப்பார்.
பெண்ணின் வலது முழங்கால் பகுதியில் மச்சம் இருந்தால் அவர் மற்றவர்களை அடக்கியாள விரும்புவார். பிடிவாதம் இவர் உடன்பிறந்ததாகும்
பெண்ணின் கால் முட்டியில் மச்சம் இருந்தால் அவர் வசதியான வாழ்க்கை வாழ்வார்.
பெண்ணின் இடது கால் முட்டியில் மச்சம் இருந்தால் அவர் தன் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்.
பெண்ணின் வலது கால் முட்டியில் மச்சம் இருந்தால் அவர் பணத்துக்காக மற்றவர்களை ஏமாற்ற தயங்க மாட்டார்.
பெண் தொடை மச்ச பலன்கள்
பெண்ணின் தொடையில் மச்சம் இருந்தால் அவர் மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துவார்.
பெண்ணின் இடது தொடையில் மச்சம் இருந்தால் அவர் மனம் தடுமாற்றம் நிறைந்ததாக இருக்கும். ஒரு முடிவு எடுப்பதில் தயக்கம் இருக்கும். ஆனாலும் கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவார்.
பெண்ணின் வலது தொடையில் மச்சம் இருந்தால் அவர் உயர்ந்த குணம் உடையவராக இருப்பார். மேலும் இவருக்கு தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்
பெண்ணின் புட்டங்களில் மச்சம் இருந்தால் அவர் சுகபோக வாழ்க்கையும், எதையும் சாதிக்கும் வல்லமையும் கொண்டவராக இருப்பார்.
பெண்ணின் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் அவரை விட ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் அவரை தேடி வரும்.
ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.