பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம்
பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய்
பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை
பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் – துர்க்கை
பரணி நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் – மனுஷகணம்
பரணி நட்சத்திரத்தின் விருட்சம் – நெல்லி (பாலில்லா மரம் )
பரணி நட்சத்திரத்தின் மிருகம் – ஆண் யானை
பரணி நட்சத்திரத்தின் பட்சி – காக்கை
பரணி நட்சத்திரத்தின் கோத்திரம் – விசுவாமித்திரர்

பரணி நட்சத்திரத்தின் வடிவம்

பரணி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 2வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘அடுப்பு’ என்ற பெயரும் உண்டு. பரணி நட்சத்திரம் வான் மண்டலத்தில் முக்கோணம், அடுப்பு போன்ற வடிவங்களில் காணப்படும்.

பரணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்பது பழமொழி. அந்த பழமொழிக்கு ஏற்ப இவர்களுக்கு சுகமான வாழ்வு அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை சாதிக்கக் கூடிய மனவலிமையும், கோபமும், பிடிவாத குணமும் கொண்டவர்கள். தங்கள் துணையின் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள். சிலருக்கு பெண்களால் பண விரயம் ஆகலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாலிப வயதில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

குடும்ப வாழ்க்கை சீரும், சிறப்பமாக அமையும். செல்வ செழிப்போடும், சீரும் சிறப்போடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். இவர்கள் மனைவி, பிள்ளைகள், தாய் தந்தை ஆகியோர்களை அதிகம் விரும்புவார்கள். எந்த வேளையில் இருந்தாலும் மற்றவர்கள் இவர்களை பின்பற்றும் வகையில் வழிகாட்டியாக அவர்களுக்கு இருப்பார்கள். தனக்கு கீழ் வேலை செய்பவர்களை அடிமை போல எண்ணாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியசாலிகள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு தொப்புள் அல்லது அதன் அருகில் எள் வடிவில் சிறிய மச்சம் காணப்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வார்கள். அழகாக உடை உடுத்துவதிலும், விதவிதமான அணிகலன்களை அணிந்து கொள்வதிலும் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். இவர்களுக்கு நடனம், பாட்டு, இசை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள்.

இவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் கொண்டவர்கள். இரக்கக் குணமும், தர்ம சிந்தனையும் அதிகம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். கொஞ்சம் பயந்த தன்மையும், கோழைத்தனமும் அவ்வப்போது தோன்றி மறையும். பயந்தாலும் அதை வெளிக்காட்டிகொள்ளமாடார்கள். பெரும்பாலும் இவர்கள் இரும்பு சம்மந்தமான தொழிலை செய்யக்கூடியவர்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காம உணர்வு அதிகம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இவர்கள் அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றலை பெற்றிருப்பார்கள். எதிரிகளை மிக சுலபமாக வெற்றி கொள்வார்கள். மேலும் இவர்களுக்கு நன்றியுணர்வு அதிகம் இருக்கும். மனசாட்சிக்கு விரோதமாக நடக்கமாட்டார்கள்.

தேவையில்லாத செயல்களிலும், முயற்சிகளிலும் ஈடுபட்டு நேரத்தை விரயமாக்குவார்கள். அன்றாடப் பணிகளில், ஒழுங்காகச் செயல்படமாட்டார்கள். வழக்கத்துக்கு மாறான செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். நல்ல மனம் படைத்தவர்கள். தங்கள் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக வெளியிடும் குணமிக்கவர்கள்.

பரணி நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் சட்டென்று கோபம் கொள்ளக்கூடியவர்கள். பிரபலமானவர்களின் நட்புகளை கொண்டவர்கள். போட்டிகளில் வெற்றி காணக்கூடியவர்கள். இவர்கள் சிவந்த மேனியை கொண்டிருப்பார்கள். இவர்கள் வீரர்களாகவும், பலசாலியாகவும் இருப்பார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என காட்டி கொள்வார்கள். இவர்களுக்கு பொறுமை என்பது சற்று குறைவு. கல்வியில் பல துறைகள் சம்மந்தமான அறிவை உடையவர்கள். மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசக் கூடியவர்கள். நீதி, நெறி தவறாமல் நடக்கும் உத்தமர்கள்.

பரணி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் நிறைய திறமை மற்றும் சிறந்த கல்வியறிவு உடையவர்கள். எளிதில் எதிரியை வெல்லக்கூடிய கெட்டிக்காரர்கள். இவர்கள் ஞானிகளாக இருப்பார்கள். தான் பணிபுரியும் துறையில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பணம் சேர்ப்பதில் அதிக ஆர்வமுடையவராக இருப்பார்கள். ஆனால் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். புத்திசாலித்தனமான பேச்சுத் திறமையால் பல கீர்த்திகளை பெற்றவர்கள். நற்குணங்களை வாய்க்கப் பெற்றவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை இவர்களிடம் நிறைந்து காணப்படும்.

பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். போராட்ட குணம் உடையவர்கள். எதிலும் ஜெயம் கொள்ளக்கூடியவர்கள். ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்வார்கள். உருண்டையான பெரிய கண்களை உடையவர்கள். திடகாத்திரமான உடல் அமைப்பு உடையவர்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். நல்ல உயரமாக இருப்பார்கள். இவர்கள் பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருக்கும்.

பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் பரணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். அகங்காரம் உடையவர்கள். பிடிவாத குணம் மிகுந்தவர்கள். தீய பழக்கம் உடையவராகவும் இருப்பார்கள். ஓரளவு கல்வி ஞானம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலனோர் குண்டாக இருப்பார்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். இவர்கள் சுயமாக முடிவெடுப்பதில் தயக்கம் கொள்வார்கள். அலங்காரத்திலும், ஆடம்பரத்திலும் அதிக விருப்பம் உடையவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவனாவார். சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால் இயற்கையாகவே நல்ல அழகும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டிருப்பார்கள். துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் தராசு போல எதையும் சீர்தூக்கி...
மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள்....
அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

திருமணத்தில் அம்மி மிதித்தல் சடங்கு ஏன் நடத்தபடுகிறது தெரியுமா

திருமணத்தில் அம்மி மிதித்தல் இந்து திருமணங்களில் பல்வேறு சடங்கு, சம்பிரயதயங்கள் அந்த காலம் முதல் தற்போது வரை வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல சடங்கு சம்பிரதாயம் தற்போது வழக்கில் இல்லா விட்டாலும் முக்கியமான ஒரு...
உடல் சூட்டை குறைக்க வழிகள்

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகளும் அதற்கான தீர்வுகளும்

உடல் சூடு எதனால் ஏற்படுகிறது? இன்றைக்கு பலருக்கும் உடலில் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று உடலில் சூடு. உடல் குளிர்ச்சியாக இருந்தாலே பல நோய்களில் இருந்து நாம் தப்பித்து விடலாம்....
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம் தோஷங்களில் மிக கடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரியன், மற்றும் சந்திர கிரகங்கள் ராகு அல்லது...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.