கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள். பேச்சாலும், செயலாலும் மற்றவரை புண்படுத்த மாட்டார்கள். எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு அதை முடித்து காட்டுவார்கள். எதையும் முன் நின்று முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இயற்கையாகவே இவர்களுக்கு அமைய பெற்று இருக்கும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

 

 

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். ஆதனால் எளிதில் பொன், பொருள் சேர்கை பெற்று பணக்காரர் ஆகிவிடுவார்கள். நல்ல வழியில் மற்றவர்களை நடக்க கற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். இவர்களின் நட்பு வட்டம் அதிகம். நிறைய சிந்திக்கும் ஆற்றலும், அதை செயல்படுத்துவதில் நிறைய சாதூர்யமும் நிறைந்தவர்கள். பெரும்பாலும் இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் நன்றாக இருந்தால் இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நயமாக பேசி வசியப்படுத்தும் பேச்சாற்றல் கொண்டவர்கள்.

இவர்களில் பெரும்பாலோனோர் சிவந்த மேனியை கொண்டிருப்பர். இவர்கள் சுறுசுறுப்பான எண்ணம் கொண்டவர்கள். ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்வார்கள். ஒரு விஷயத்தில் பலன், அல்லது ஆதாயம் இல்லாமல் இறங்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை பற்றி தெரியவில்லை என்றாலும் அதை கற்று கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு வியாபாரத்திற்கு தேவையான நல்ல தகுதியும் திறமையும் இருக்கும். புது புது யுக்திகளை தாங்கள் செய்யும் வியாபாரத்தில் புகுத்தி கொண்டே இருப்பார்கள். நல்ல பண்பும், பிறர் மெச்சும்படியான நல்ல நடத்தையும் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

இவர்களிடம் பேச்சை விட செயலில் அதிக வேகம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ்வது இவர்களுக்கு பிடிக்காது. கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். தெய்வீக பணிகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அயல் நாடுகளுக்கு செல்லும் யோகம் இவர்களில் பல பேருக்கு உண்டு. இசை, எழுத்து, ஆடல், பாடல் என்று ஏதேனும் ஒரு கலையில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். யாரேனும் தவறு செய்தால் அதை முகத்திற்கு நேராக சொல்லி விடுவார்கள். யாராவது உங்களுக்கு உதவி செய்தால் அதை காலத்திற்கும் மறக்க மாட்டார்கள்.

இவர்களின் மத்திய பருவத்தை விட குழந்தை பருவம் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கை முழுக்க யோகத்துடன் வாழ்வார்கள். இவர்கள் செய்யும் செயல்களில் திறமைசாலிகள் என்று பெயர் எடுப்பார்கள். வாழ்வின் மத்திய பகுதியில் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை காண்பார்கள். இதனால் நல்ல பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள். இவர்கள் மனதில் இருக்கும் விஷயங்களை பிறர் அறிந்து கொள்வது கடினம். நெருக்கமானவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசி பழகுவார்கள்.

இவர்களின் வரக்கூடிய வாழ்க்கை துணை மேற்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து அமையும். இவர்களின் வாழ்க்கைத் துணையானவர் தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் மிகுந்த ஆசையும், ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக இருப்பார். பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் நல்ல யோகமான காலம் அமையும். திருமண தடை நீங்க முருகனை வழிபாடு செய்து வருவது நன்மையை தரும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சோமவார விரதத்தின் மகத்த்துவம்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் பலன்கள்

கார்த்திகை சோமவார தரிசனத்தின் மகத்துவம்  சிவபெருமானை தினந்தோறும் வழிபடுவது சிறந்தது தான் என்றாலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை தினத்தன்று இறைவனை வணங்குவது பெரும் பாக்கியத்தை கொடுக்கும். தமிழில் திங்கட்கிழமை எனப்படுவதே, வடமொழியில் சோமவாரம் என்று...
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வருணன் பூராடம் நட்சத்திரத்தின் பரிகார...
லிப்ஸ்டிக் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால்...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...
அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் | அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழம் அன்னாசி பழம் பிரேசில் மற்றும் ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. இதன் அறிவியல் பெயர் `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்பதாகும். இது பிரமிலசே இனத்தைச் சேர்ந்த ஒரு...

மீன ராசி பொது பலன்கள் – மீன ராசி குணங்கள்

மீன ராசியின் குணங்கள் மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கியுள்ளன. இது கால...
பாய் வகைகள்

பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்

பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள் வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கை முறையில் பல விதமான நவீன படுக்கைகள் வந்துவிட்டன. அதோடு சேர்ந்து பல்வேறு நோய்களும் வந்துவிட்டன. பாய் போட்டு உறங்கும் வழக்கத்தை பலரும் மறந்துவிட்டனர்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.