கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு சாதுர்யம் மிகுந்தவர்கள். இவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பார்கள். தலைமைப் பண்பும், எல்லோரையும் வழி நடத்திச் செல்லும் திறனும் இவர்களிடம் இயல்பாக அமைந்திருக்கும். ஆனால் இவர்கள் மனதில் எப்போதுமே எதிர்மறை சிந்தனைகள் இருந்துகொண்டே இருக்கும். இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோ என்கிற குழப்பமும், மன தெளிவின்மையும் இருக்கும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

இவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெரும் கூடத்தில் இருந்தாலும் அதில் இவர்கள் தனித்து தெரிவார்கள். தன்னைவிட மேலான இடத்தில் உள்ளவர்கள் மீது ஒரு கண் எப்போதும் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த இடத்திலே போய் அமர்வார்கள். அப்படிப்பட்ட ராஜதந்திரி இவர்கள். இவர்கள் யாருடன் பழகினாலும், பழகியவர் மறக்க முடியாத அளவுக்கு அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மிக பெரிய ஆசைகளை மனதில் பூட்டி வைத்திருப்பார்கள். அந்த ஆசையை அடைய கடுமையாக உழைப்பார்கள். தான, தர்மம் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். தாராள மனப்பான்மை மேலோங்கி இருக்கும். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கலைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள். தாயின் ஆசியும், அரவணைப்பும் இருக்கும். சிலருக்கு தாய் வழிச் சொத்துகளும் கிடைக்கும்.

செல்வ செழிப்புடன் வாழக்கையை வாழ ஆசைபடுவார்கள். இவர்களுக்கு தண்ணீரின் அதிக விருப்பம் இருக்கும். தண்ணீரை கண்டால் சிறு குழந்தை போல மாறி விளையாடுவார்கள். நண்பர்களிடையே விரோதத்தை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலோனோர் சற்று பலவீனமான உடலமைப்பை கொண்டவர்கள். இவர்கள் சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கி செல்லவே விரும்புவார்கள். செயல்களில் மந்தமாகவும், கவன குறைவாகவும் இருப்பார்கள். இவர்கள் விவேகமான புத்திசாலிதனத்தை கொண்டவர்கள். கலை, மற்றும் இசையில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். எதையும் ஆர்வமுடன் கற்று கொள்வார்கள்.

இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை விரைவாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல செயல்படுவார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க கூடியவர்கள். சிலசமயங்களில், இவர்கள் தைர்யம் மிகுந்தவர்களாக காட்சியளிப்பார்கள். துணிச்சலான காரியங்களை செய்ய கூடியவர்கள். ஆனால் இவர்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல கற்பனை சக்தி மிகுந்தவர்கள். நாடோடிகள் போல அலைந்து திரிந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்கள். புதியதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

வாழ்க்கைத்துணையானவர் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து இவர்களுக்கு வருவார்கள். வழக்காடுவதில் நல்ல திறமை மிக்கவர்களாக இவர்களின் வாழ்க்கைத் துணை அமைவார்கள். தான் கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் மாறாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் திருமண வாழ்கையில் பல போரட்டங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்காது. கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிகச் சிறப்பாக அமையும். திருமண தடைகள் நீங்க இவர்கள் விநாயகரை வழிபடுவது நன்மையைக் கொடுக்கும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...
உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
அதிரசம் செய்முறை

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம்....
பௌர்ணமி திதி

பௌர்ணமி திதி பலன்கள், பௌர்ணமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

பௌர்ணமி திதி பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும். பௌர்ணமி...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
12 ராசிகள்

உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

  உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்     மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.