வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்

பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என கருதப்படுகிறது. நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி மாதமாகும்.

வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபகசக்தி இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு யோசனைகள் சொல்வதில் வல்லவர்கள். இவர்களின் பலமே பொறுமை தான். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை எளிதாக அடையாளம் காண்பவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு இயற்கையிலேயே வசீகரத் தோற்றம் அமைந்து இருக்கும். ஆடம்பரமாக வாழ்வதை விரும்புவார்கள். பெண்களிடம் நயமும், நளினமும் கலந்திருக்கும். இவர்கள் இன்பம், துன்பம், நிறைகுறை போன்றவற்றை சமமாக பாவிப்பார்கள். இவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக தெரிந்து கொள்ள நினைப்பார்கள். மனதில் வருத்தம், கோபம் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

குடும்பத்தில் இவர்கள் முக்கியமானவராக இருப்பார்கள். உற்றார், உறவினர், உடன்பிறப்பு எல்லோரையும் அனுசரித்துச் செல்வார்கள். சில விஷயங்களில் பிடிவாதமாக இருந்து சாதிப்பார்கள். குற்றம், குறைகளை சரியான நேரத்தில் சுட்டிக் காட்ட தயங்கமாட்டார்கள். இவர்கள் கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். தங்களின் சுய தேவைக்கும், ஆசைக்கும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயங்கமாட்டார்கள்.

தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகியவற்றில் நிர்வாகத் திறமையும், சமயோசித புக்தியும், யுக்தியும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பல்துறை வித்தகர்களாகவும், கலைத்துறையில் சாதனை புரியும் யோகமும் உண்டு. சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், பதிப்பகங்களை நடத்துபவராகவும், அச்சகத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். சுற்றுலாக்கள், புனித ஸ்தலங்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். உல்லாசப் பயணங்களிலும் விருப்பம் உடையவர்கள். தனிமையை விரும்புபவர்கள், இயற்கையை, கலையை, அழகை ஆராதிப்பவர்கள். தங்களின் பயண அனுபவங்களை மிகுந்த ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

இவர்களுக்கு உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி உண்டாகும். ரத்த சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும். சைனஸ், தும்மல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். வயது ஏறஏற ஞாபகமறதி நோய் வர வாய்புக்கள் உண்டு. நரம்புத் தளர்ச்சி பிரச்சனையும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இவர்களுக்கு நல்ல ஆற்றலும், நிர்வாகத் திறமையும் உள்ள பெண் / ஆண் வாழ்க்கைத் துணையாக வருவார்கள். சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். புதன், செவ்வாய், சுக்கிரன் அனுகூலமாய் இருக்கப் பிறந்தவர்கள், மனைவி மூலம் பல யோக, போக, சுக பாக்கியங்களை அனுபவிப்பார்கள். ஒரு சிலருக்கு உயர்ந்த பதவி, புகழ், செல்வம், செல்வாக்குள்ள மனைவி அமைவதற்கான யோகமும் உண்டு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...
துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.