இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால் அகம், புறம் என இரண்டும் பொலிவுடனும், ஆரோக்கியத்துடனம் இருக்கும்.

பழங்கள் நமது சரும அழகினை மேம்படுத்த பெரிதும் பயன்படுகிறது. ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட பழங்களில் சில முக்கியத்துவம் வாய்ந்த நம்மை இளமையாக வைத்துக் கொள்ள கூடிய 6 பழங்களை பற்றி பார்க்கலாம்.

ஆப்பிள்ஆப்பிள்

ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள ஒரு வகையான நார்ச்சத்து, தலைமுடியின் பி.எச் அளவைப் பராமரிக்க உதவுகிறது. இதைத் தலையில் தடவி வந்தால் பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதில் உள்ள மாலிக் அமிலம் சருமம் இளமையாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள மாலிக் அமிலம் இன்றைக்குப் பல அழகு க்ரீம், சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

அவகோடாஅவகேடோ

அவகேடோ அல்லது பட்டர் ஃபுரூட்டில் சருமம் மற்றும் அழகு வைட்டமின் என்று அழைக்கப்படும் பயோட்டின் உள்ளது. இது சருமம் புத்துயிர் பெற உதவுகிறது. இதில் சருமத்தின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும் வைட்டமின் – இ நிறைவாக உள்ளது. இந்தப் பழத்தில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்துக்குத் தேவையான இயற்கை வழுவழுப்பு எண்ணெய்யை வழங்குகிறது. இதனால், சருமம் இளமையுடனும் பொலிவுடனும் இருக்கும்.

வாழைபபழம்வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதுடன் சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் இதில், வைட்டமின் ஏ, பி, இ நிறைவாக உள்ளது. இது சருமத்துக்கு எலாஸ்டிசிட்டியை தருகிறது. வயதுக்கு மீறிய சுருக்கம், புள்ளிகள் போன்றவற்றைத் தவிர்க்கிறது. மேலும், சருமத்துக்குப் புதுப்பொலிவை தருகிறது.

கிவிகிவி

கிவி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் இருப்பதைக் காட்டிலும் வைட்டமின் சி கிவி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை இளமையுடனும் புத்துணர்வுடனும் வைத்திருக்க உதவுகிறது.

பப்பாளிபப்பாளி

பப்பாளி பழத்தை இன்றைக்கு அனைத்து சரும பராமரிப்பு க்ரீம் தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. பப்பாளியில்  வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின், பாப்பின் என்ற என்சைம் உள்ளன. செரிமானத்தைச் சீராக்குகிறது. கண் பார்வை குறைபாட்டை தடுக்கிறது. நொதிக்கப்பட முடியாத புரதத்தைக் கூட நொதிக்கச் செய்ய உதவுகிறது. இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டும் கூட, சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை சரி செய்து, புத்துயிர் ஊட்டுகிறது.

மாதுளைமாதுளை

மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். அதில், அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. சருமத்தில் ஏற்படக் கூடிய ஃப்ரீராடிக்கல் பாதிப்பில் இருந்து காத்து இளமையை தக்க வைக்கிறது. புறஊதாக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தைக் காக்கிறது. சருமத்தின் அடிப்பகுதியான டெர்மிஸ், எபிடெர்மிஸ் திசுக்கள் வளர்ச்சிக்கு இது உதவுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம்...
மேஷ ராசி பொதுவான குணங்கள்

மேஷ ராசி பொது பலன்கள் – மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள் மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.  மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ மட்டன் கறி – ½ கிலோ பெரிய வெங்காயம் – 3 ( பெரியது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.