பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களுள்  ஒன்று பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது அல்லது பிறந்த முடி எடுப்பது. ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலும், இன்னும் ஒரு குடும்பங்களில் ஒரு வருடத்திற்குள்ளும் குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். எதற்கு இந்த பழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என பின்வருமாறு பார்க்கலாம்.

மொட்டை போடுவது ஏன்

ஏன் மொட்டை போடுகிறார்கள்

பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்கு முக்கிய காரணம் குழந்தை தாயின் கருவறையில் பத்துமாதம் இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. தாயின் கருவறையில் இருக்கும்போது ரத்தம், சிறுநீர் போன்ற சூழ்நிலையில் இருக்கும். குழந்தை பிறக்கும்போது இந்த கழிவுகள் வெளியே வந்துவிட்டாலும், கண்ணுக்கு தெரியாத சில கழிவுகள் குழந்தையின் தலையில் சேரும்.

உடலில் சேரும் இந்த கழிவுகள் தலையில் உள்ள மயிர்கால்கள் வழியாகத்தான் வெளியேற முடியும். இந்த கழிவுகளை மொட்டை போடுவதன் மூலமாகத்தான் வெளியேற்ற முடியும்.

மொட்டை போடாவிட்டால் என்ன ஆகும்

மொட்டை போடாவிட்டால் அந்த கழிவுகள் அப்படியே தலையில் தங்கி அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். உதாரணமாக சொறி, சிரங்கு, பொடுகு போன்றவை. உடலுக்கு தலையே பிரதானம். தலையை சுத்தமாக வைத்து கொள்ளவிட்டால் அது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவேதான் மொட்டை என்ற பெயரில் நம் முன்னோர்கள் தலையில் உள்ள கழிவுகளை அகற்ற பிறந்த குழந்தைக்கு மொட்டை போடும் பழக்கத்தை கொண்டு வந்தனர்.

ஒரு சில குடும்பங்களில் தங்கள் குழந்தைக்கு சிறிது கால இடைவெளியில் இரண்டாவது மொட்டை போடுவார்கள். இதற்கு காரணம் முதல் மொட்டை போடும்போது வெளியேறாத சில கழிவுகள் இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதால்தான். நம் மக்களிடம் நேரடியாக பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுங்கள் என்று அறிவியல் ரீதியாக சொன்னால் போடமாட்டார்கள். அதனால் தான் சாமிக்கு நேர்த்திகடன் என்ற பெயரில் மக்களிடம் இதை செய்ய சொன்னார்கள். எதையும் ஆன்மிகம் கலந்த அறிவியலுடன் சொல்வதே நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...
சஷ்டி திதி பலன்கள்

சஷ்டி திதி பலன்கள், சஷ்டி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சஷ்டி திதி சஷ்டி என்றால் ஆறு. இது முருகப் பெருமானுக்குரிய திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி...
5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
பல்வேறு திருமண சடங்குகள்

பல்வேறு விதமான திருமண சடங்குகள்

திருமண சடங்குகள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு...
லக்ஷ்மி குபேர வழிபாடு

குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்?

குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே குறிப்பிடுகிறோம். செல்வத்தை வேண்டி மகாலட்சுமியை வணங்கும் போது அவருடைய பரிபூரண அருளை பெற்ற குபேரனையும் சேர்த்து வழிபடுவதால் நமக்கு இரட்டிப்பு...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.