மார்கழியில் சுபகாரியங்கள் ஏன் செய்வது இல்லை

மார்கழியில் சுபகாரியங்கள்

மார்கழி மாதம் என்றால் நமது நினைவுக்கு முதன் முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான அழகிய கோலங்கள் தான். மார்கழி மாதத்தின் பெருமையை ஆண்டாள், “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!” என்ற பாடலில் விளக்குகிறார்.

ஆண்டாள் நோன்புஆண்டாள் மட்டும் அல்ல, மாணிக்கவாசகரும் கூட திருவெம்பாவையில் மார்கழியின் அருமைகளை இவ்வாறு கூறுகிறார், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்” என்று மார்கழி மாத நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகிறார்.

சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். அந்த வகையில் ஜோதிடத்தின் அடிப்படையில் கால புருஷ தத்துவத்தின்படி மார்கழி 9 ஆவது மாதம் ஆகும். மார்க்கண்டேயர் மார்கழி மாதத்தில் பிறந்தவர். அதன்படி மார்க்கண்டேய புராணத்தின் படி மரணத்தை வெல்லக் கூடிய மாதமாகவே மார்கழி மாதம் பார்க்கப்படுகிறது. சிவ புராணத்தின் அடிப்படையில் ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய சிறந்த மாதம் மார்கழி. தேவ குருவான பிரகஸ்பதியின் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், இம்மாதம் தேவ லோகத்தில் காலைப் பொழுதாகும்.

கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “மாதங்களில் நான் மார்கழி என்கிறார்”. அந்த வகையில், சாஸ்திரங்களின் அடிப்படையில் மார்கழி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் வாசுதேவன் என்றும், ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால், வாக்தேவி என்றும் பெயர் சூட்டுவது சிறப்பு.

கடவுளின் மாதம்

மார்கழி மாதம், இறைவனுக்கான மாதம். அதனால், தான் மார்கழி மாதத்தில் திருமணங்களில் செய்யப்படுவது இல்லை வாஸ்து பூஜைக்கும் கூட இடம் இல்லை.

மார்கழி மாதமும், கன்னிப் பெண்களும்

முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் நல்ல வாழ்க்கை துணையை வேண்டி பாவை நோன்பு இருப்பார்கள். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழி அமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மார்கழி மாத பாவை நோன்பு

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று குளித்து விட்டு மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அந்த திருவரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவை நோன்பினை மேற்கொண்டாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மார்கழி மாத கோலம்

தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. இது சூரியனின் தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் எழுந்து நீராடி இறைவனை வழிபடுகிறோம். கோலமிட்டு மகாலக்ஷ்மியை வீட்டிற்கு அழைக்கிறோம்.

மார்கழி மாத சிறப்புகள்அப்படியாக, இறைவனை வழிபடுவதால் நாடி, நரம்புகள் வலுவடையும். நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும். இந்த மாதத்தை சிலர் சூன்ய மாதம் என்றும் சொல்கின்றனர். திருமணம் போன்ற சுப காரியங்களை கூட இந்த மாதத்தில் செய்வதில்லை. இதற்கு காரணம், இறைவனை வழிபடுவதற்காகவே பெரியோர்கள் கொடுத்த மாதம் “மார்கழி மாதம்”. இந்த மாதத்தில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் மனம் மற்றும் உடலில் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும். இறைவனுக்காகவே ஒதுக்க வேண்டிய மார்கழி மாதத்தை திருமணம் போன்ற லௌகீக வாழ்க்கைக்கு தேவையான காரியங்களில் செலவிடுவது இறை பக்திக்கு ஏற்றது அல்ல என்பதற்காகவே மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்கின்றனர். இது முற்றிலும் இறைவனுக்கான மாதம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...
பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க

கோடை வெயிலில் இருந்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

சரும பராமரிப்பு கோடை காலத்தில் அதிக அளவில் பாதிக்கப்படுவது நமது சருமம் மற்றும் தலைமுடி தான். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் உடலில் நீர்ச்சத்து குறைந்தது உடல் சோர்வடைந்து பொலிவிழந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தில் இருந்து ...
பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்

பித்ரு தோஷம் உண்மையா?

பித்ரு தோஷம் உண்மையா? "தீதும் நன்றும் பிறர் தர வாராது" நன்மையோ, தீமையோ பிறரால் வருவது கிடையாது. அவரவர் செய்கிற பாவ புண்ணியத்தால் மட்டுமே வரும். "மனிதன் மதி வழியில்... மதியோ விதி வழியில்... விதியோ கர்ம வழியில்... கர்மா உன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.