கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும் 

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும் ஒரு தொகையை ஈட்டக்கூடியவர்கள் இன்றைய நாள் எப்படி இருக்கும்? என்கிற பதட்டத்தோடு தான் செல்வார்கள்.

செல்வம் பெருகஇவர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களைப் போன்று மாதமானால் சம்பளம் வந்து சேராது. அன்றாட செலவுகளை சமாளிக்க தினந்தோறும் அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தினமும் சம்பாதித்துக் கொள்ளலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மாதம் ஒரு முறை வாங்கும் சம்பளத்தை வைத்து தான் மொத்த மாதத்தையும் ஓட்டியாக வேண்டும். ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல உத்தியோகமும், தொழிலும் சமமான தராசில் தான் நிற்கிறது.

ஒரு வீட்டில் மனைவி என்பவள் தான் லட்சுமியின் அம்சமாக இருக்கிறாள். அந்த மனைவியானவள் தினம்தோறும் கணவன் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பொழுது சரியாக வழி அனுப்பும் முறையை பின்பற்ற வேண்டும். இந்த முறையில் அவர்களை வழி அனுப்பினால் வெற்றி நிச்சயம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் கணவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது அவர்களை புன்னகை பூத்த முகத்துடன் வழி அனுப்பி வைத்தால் அன்றைய நாள் அவர்களுக்கு வெற்றிகரமாக  அமையும்.

நீங்கள் கோவிலுக்கு செல்ல விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை ஒரு பேப்பரில் மடித்து வைத்து வீட்டிற்கு கொண்டு வருவீர்கள் அல்லவா? அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் கணவன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் அவர்களுக்கு அந்த பிரசாதத்தை நெற்றியில் வைத்து விடுங்கள். அது போலவே வெளியில் செல்லும் கணவன், மனைவி கையால் 10 ரூபாய் பணமாவது வாங்கி கொண்டு சென்றால் அன்றைய நாள் வருமானம் அதிகரிக்கும் என்கிற ஐதீகம் உண்டு. தினமும் பத்து ரூபாயாவது கணவனுக்கு பாக்கெட்டில் வைத்து வழி அனுப்பி பாருங்கள்! அன்றைய நாள் வருமானம் சிறப்பாக அமையும்.

ஒரு வீட்டில் வரவு, செலவு கணக்குகளை பார்ப்பது கணவனாக இருப்பதை விட  மனைவியாக இருப்பது சுபீட்சத்தை கொடுக்கும். கணவன் பட்ஜெட் பார்த்தால் மனைவிக்கு கணவன் படும் கஷ்டம் விளங்காது. மனைவி அதை ஏற்றுக்கொண்டால்தான் அந்த வீட்டில் செல்வம் பொங்கும்.

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை மனைவியிடம் கொடுத்து விட்டு உங்களுக்கு தேவையான பணத்தை மனைவியின் கையால் வாங்கிக் கொண்டு செல்வதும் கணவனுக்கு என்ன தேவை என்பதை அவன் கேட்காமலேயே மனைவி அதை நிறைவேற்றுவதும் சிறந்த தம்பதிகளாக வாழ வழிகளாகும்.

சம்பாதிக்கும் மனைவியாக இருந்தால் இது உன்னுடைய பணம்! இது என்னுடைய பணம்! என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல்  நம்முடைய பணம் என்கிற மனப்பான்மை இருந்தால் தான் பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு, தினந்தோறும் செல்வது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். உங்களை சுற்றி நல்ல அதிர்வலைகள் எழுவதை நிச்சயமாக நீங்களே பார்க்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

riddles in tamil

Most intelligent Puthirgal | Puzzles with Answers | Brain games

மூளைக்கு வேலை தரக்கூடிய கேள்விகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...
தை மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். பன்னிரண்டு தமிழ் மாதங்களில்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.