மகாவிஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி பிடித்து விட காரணம்
திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகாலக்ஷ்மி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து சேரும் என்பது உண்மை என்று முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
கணவனின் காலை மனைவி பிடித்து விடக் காரணம்
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகம் சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள்.
எனவே சனிகிர ஆளுமை உள்ள ஆணின் கால் பகுதியில், சுக்கிரனின் ஆதிக்கம் உள்ள பெண்ணின் கைகள் பட ஆணுக்கு பொன் , பொருள், பணம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இதனால் தான் செல்வத்திற்கு அதிபதியான மாஹலக்ஷ்மி விஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர்.
கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு எதிர்மறை நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டு உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது என சான்றோர்கள் கூறுகின்றனர்.