நவராத்திரி முதல் நாள் வழிபாடு
“நவராத்திரி” என்றால் “ஒன்பது இரவுகள்” என்று பொருள். நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும்.
மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழித்து உலகிற்கு நன்மை செய்யும் விதமாக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இந்த நவராத்திரி விழாவாகும்.
புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்களும் பெண் தெய்வங்களை போற்றி வழிபட்டு அவர்களை போல் பெண்களாகிய நாமும் தைரியத்துடனும், வீரத்துடனும் செயல்பட்டு நாம் தினசரி வாழ்வில் சந்திக்க கூடிய மகிஷாசுரன் போன்ற அசுரர்களை கண்டு பயப்படாமல் அவர்களை எதிர்த்து வென்று ஜெய்க்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

புரட்டாசியின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து, ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவடையும் இந்த நவராத்திரியை தான், வீட்டில் கொலு வைத்து விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.
நவராத்திரி பூஜை
நவராத்த்திரி பூஜை செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 06.15 மணி முதல் 7.15 மணி வரையிலான நேரத்திற்குள் நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை துவங்கி விட வேண்டும். அதேபோல் மாலை 4.45 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பூஜை செய்ய வேண்டும்.
வழிபட வேண்டிய அம்பாள் : ஷைலபுத்ரி . ஷைலபுத்ரி துர்க்கை அம்மனின் முதல் வடிவம். மலை அரசனான இமவான் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.
கோலம்: அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் இட வேண்டும்,
மலர்கள்: மல்லிகை
நெய் வேத்தியம்: வெண்பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும்.
பாட வேண்டிய ராகம் : தோடி
பூஜை நேரம்: காலை, 6.15 – 7.15 மணி வரை; மாலை 4:45 – 5:45 மணி வரை.
முதல் நாளில் அம்பாளுக்கு ஆரஞ்சு நிற வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.
நவராத்திரி பூஜை

















