வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும். வீட்டில் நிம்மதி என்பதே இருக்காது. இவ்வாறு வீட்டில் ஏற்பட்டிருக்கும் திருஷ்டி தோஷத்தைப் போக்க முன்னோர்கள் பல வழிமுறைகளை சொல்லி வைத்துள்ளனர். கீழ்கண்ட பரிகாரங்கள் செய்வதன் மூலம் திருஷ்டி கழிவதுடன் வீட்டில் இருந்து பல்வேறு நச்சுக்களும் வெளியேறுவதாக நம்பப்படுகிறது.

வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

திருஷ்டி கழிக்கும் முறைகள்

  1. அமாவாசை, பவுர்ணமி போன்ற முக்கிய தினங்களில் உச்சிவேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு திருஷ்டி கழிக்கலாம்.
  2. தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து அதனுடன் வேப்பிலை சேர்த்து வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அந்த நீரை தெளிக்க வேண்டும். மஞ்சளும் வேப்பிலையும் மிகச் சிறந்த கிருமி நாசினியாகும்.
  3. கடல் நீரை கொண்டு வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் விலகும்.
  4. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின் மேல் குங்குமம் பூசி திருஷ்டி சுற்றி வீசி எறியலாம்.
  5. ஆகாச கருடன் கிழங்கை எடுத்து அதில் மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். ஆகாச கருடன் கிழங்கு வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும் என நம்பப்படுகிறது.
  6. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை மாலை என இருவேளையும் சாம்பிராணி தூள், கருவேலம்பட்டை தூள், வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீட்டில் தூப தீப புகை காட்டினால் அனைத்து வகையான திருஷ்டிகளும் தீய சக்திகளும் வீட்டை விட்டு வெளியேறும் என்பது நம்பிக்கை.
  7. செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் பூசணிக்காயை வைத்து வீட்டில் திருஷ்டி சுற்றி போடலாம்.
  8. கிரகபிரவேச சமயங்களில் வீட்டில் பசுவையும், கன்றையும் வீட்டிற்கு அழைத்து வருவதை பார்த்திருப்போம். கோமாதா வீட்டிற்குள் வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது போல திருஷ்டி இருக்கும் வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பசுவை வீட்டிற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்களும், திருஷ்டிகளும் நீங்கும்.
  9. அதே போல வருடத்திற்கு ஒரு முறை வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம். இதனால் அனைத்து திருஷ்டிகளும் கழிந்து வீடு சுபிட்சமடையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அஷ்டமி திதி பலன்கள்

அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களை கண்டு பிறர்...
நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...
கண் திருஷ்டி நீங்க

உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட... கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு... 1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.