செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின் அருளை முழுமையாக நாம் பெற முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு (04.11.2021) அன்று வியாழக்கிழமை தீபாவளி , அமாவாசை, லக்ஷ்மி குபேர பூஜை ஆகிய மூன்று வழிபாடும் ஒன்றுசேர வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

தீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம் செய்து விட்டு புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் பல வைத்து படைத்து பின் மாலை நேரத்தில் தான் லக்ஷ்மி குபேர பூஜையை தொடங்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நேரம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகும். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

லக்ஷ்மி குபேர பூஜை

இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்வது மிகவும் சிறப்பானதாகும். 48 நாட்கள் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் தீபாவளி அன்று மட்டும் செய்து வழிபடலாம். ஒருநாள் பூஜை செய்தாலும் மகாலக்ஷ்மியின் அருளை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர், புதிதாக தொழில் தொடங்குவோர், தொழில் விருத்தி அடைய விரும்புபவர்கள் ஐந்து வியாழக்கிழமை மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்ஷ்மி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

லக்ஷ்மி குபேர பூஜை முறைகள்

லக்ஷ்மி பூஜை என்பது அன்னை மகாலக்ஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷ்மி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள்பாலிக்கிறாள்.

  1. இந்நாளில் நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க சுத்தம் செய்து அலங்காரம் செய்ய வேண்டும்.
  2. வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும்.
  3. பூஜை அறையில் லக்ஷ்மி குபேரர் படம் மற்றும் சிலை வைத்திருப்பவர்கள் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் பார்த்தபடி வைத்து, பூஜை அறை முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
  4. லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
  5. சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, முழு முதற் கடவுளான விநாயகரை வணங்கும் விதமாக மஞ்சளில் விநாயகர் பிடித்து வைக்க வேண்டும்.
  6. விநாயகருக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
  7. பச்சரிசி மற்றும் நவதானியங்களை பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு கலச சொம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்
  8. அந்த தண்ணீரில் மகாலக்ஷ்மிக்கு பிடித்தமான வாசனை பொருட்களை சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், எலுமிச்சை, ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், சேர்த்து அதில் மாவிலை வைத்து அதன் மேல் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி குங்குமம் வைத்து கலசத்தில் வைக்க வேண்டும்.
  9. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்து வைக்கலாம்.
  10. தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களை கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
  11. கலசத்தின் முன் குபேர எந்திரத்தை வரைய வேண்டும். கட்டத்தை அரிசிமாவினாலும், எண்களை குங்குமத்தாலும், கட்டத்தை சுற்றி மகாலக்ஷ்மிக்குரிய ஸ்ரீ என்னும் எழுத்தை மஞ்சளினாலும் வரைய வேண்டும்.
  12. குபேர விளக்கு இருந்தால் ஏற்றி வைக்கலாம். இல்லாதவர்கள் காமாட்சி விளக்கு மற்றும் குத்து விளக்கு ஏற்றி வழிபடலாம்.
  13. குபேர எந்திரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியான நாணயங்களை வைத்து அதில் பூக்களையும் வைக்க வேண்டும்.
  14. லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமான 5 ரூபாய் நாணயங்கள் 108 நாணயங்களை வைத்து ஒவ்வொன்றையும் மகாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து பின் ஒரு பாத்திரத்தில் அந்த நாணயத்தை போட வேண்டும்.
  15. அவ்வாறு போடும்போது நாணயத்தின் ஒலி கேட்குமாறு போட வேண்டும்.
  16. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அந்த நாணயத்தின் ஒலி லக்ஷ்மி குபேரருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
  17. குபேர பகவானின் 108 போற்றிகளை பாடி வணங்கி கற்பூர தீபாராதனை காணும் போது உள்ளன்போடு வழிபட்டோமேயானால் மகாலக்ஷ்மியின் அருள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
திரயோதசி திதி

திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை...
சுவையான மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க...
புலி கனவு பலன்கள்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

காட்டு விலங்குகளை கனவில் கண்டால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு....
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு உத்திராடம் நட்சத்திரத்தின் 2,...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....
மாம்பழ பாயாசம்

சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம் தேவையான பொருட்கள் மாம்பழ விழுது - ஒரு கப் மாம்பழ துண்டுகள் - ½ கப் சர்க்கரை – ½ கப் பால் - 1 லிட்டர் நெய் – சிறிதளவு ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.