கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டால் தீய சக்திகள் நம்மை நெருங்காது.

கார்த்திகை தீபத்தன்று நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது வழக்கம். 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும். 27 விளக்குகள் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றி வழிபட்டால் நம் இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் நாம் பெற முடியும்.

கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தியாக நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. கார்த்திகை தீபம் அன்று அதிகாலை 4 மணி அளவில் கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில்‌ அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்படும்‌.

இந்த வருடம் திருக்கார்த்திகை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை

 • கார்த்திகை தீப திருநாள் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புதிதாக தான் வாங்கி ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  நீங்கள் முன்பு பயன்படுத்திய விளக்குகளை நன்கு சுத்தம் செய்து துடைத்து பின் பயன்படுத்தலாம்.
 • புதிய விளக்கு ஏற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் தலைவாசலில் ஏற்றக் கூடிய 2 விளக்குகளை மட்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.
 • விளக்கில் விரிசல் எதுவும் இல்லாமல் நல்ல விளக்காக இருப்பது நல்லது.
 • பித்தளை, வெள்ளி போன்ற பிற விளக்குகளை ஏற்றுவதைக் காட்டிலும் மண்ணால் செய்யபட்ட அகல் விளக்குகளை ஏற்றுவது சிறந்தது.
 • அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி ஏற்ற வேண்டும்.
 • கார்த்திகை தீபத்தன்று ஒரு அகல் விளக்கினை முதலில் ஏற்றி விட்டு அதிலுருந்து மற்ற விளக்குகளை ஏற்றுவது நல்லது.
 • கார்த்திகை தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
 • கார்த்திகை திருநாளன்று தலைவாசலில் 2 தீபங்களும், பூஜை அறையில் 5 தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த 5 தீபங்களையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும்.
 • வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்ற வேண்டும். குறிப்பாக சமயலறையிலும் விளக்கேற்ற வேண்டும்.
 • வாசலில் அரிசி மாவினால் கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவில் ஒரு விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.
 • உங்கள் வீட்டில் துளசி செடி , நெல்லி மரம் , மாதுளை மரம் போன்றவை இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மூன்றிலும் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

கார்த்திகை தீபம் எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்?

 • கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றினால் துன்பம் நீங்கும், குடும்ப அபிவிருத்தி ஏற்படும்.
 • மேற்கு திசை நோக்கி விளக்கேற்றினால் கடன், தோஷம் நீங்கும்.
 • வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும்.
 • தெற்கு திசை நோக்கி ஏற்றுவது குடும்பத்திற்கு நல்லதல்ல.
 • கார்த்திகை தீப விளக்கு
 • நம் வீட்டு பூஜையறையில்‌ ஒரு முக தீபம்‌ ஏற்றினால்‌ மத்திம பலன்‌ தரும்‌.
 • இரண்டு முக தீபம்‌ ஏற்றினால்‌ குடும்பம்‌ ஒற்றுமை தரும்‌.
 • மூன்று முக தீபம்‌ ஏற்றினால்‌ புத்திர சுகம்‌ தரும்‌.
 • நான்கு முக தீபம்‌ ஏற்றினால்‌ பசு, பூமி சுகம்‌ தரும்‌.
 • ஐந்து முக தீபம்‌ ஏற்றினால்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது ஐதீகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

திருஷ்டி கழிப்பது எப்படி வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும்....
ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம்...
கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி திருவோணம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : விஷ்ணு திருவோணம் நட்சத்திரத்தின் பரிகார...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.