எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்?

நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது வயதானவர்களுக்கு, நோயாளிகளுக்கு, சிறு குழந்தைகளுக்கு பொருந்தாது. பலரும் எண்ணெய் தேய்த்து, தீபாவளி அன்று, அதிகாலையில் குளிப்பர். இது எல்லோருக்கும் பொதுவானது. அறிந்ததும் கூட. எனினும் தீபாவளி தவிர மற்ற நாட்களில் அல்லது மற்ற கிழமைகளில் எண்ணெய் ஸ்நானம் செய்தால் என்னென்ன பலன்கள் எற்படும் என்பதை நாம் இந்தக் கட்டுரை மூலமாகப் பார்ப்போம். வாருங்கள்.

எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும் கிழமைகளும் பலன்களும்

ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – அழகு போகும்.

திங்கட்கிழமை கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – பொருள் சேரும்.

செவ்வாய்க்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – குடும்பத்திற்கு ஆகாது.

புதன்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – கல்வி வளரும்.

வியாழக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – அறிவு அழியும்.

வெள்ளிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – புகழ் உண்டாகும்.

சனிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – சம்பத்து உண்டாகும்.

மேற்கண்ட இவை ஒரு புறம் இருக்க, அமாவாசை, பிறப்பு, இறப்பு காலங்களில் வெந்நீரில் குளிக்க கூடாது.

அதே போல, அது ஏன் நல்லெண்ணெயில் நீராட வேண்டும்? ஜோதிட சாஸ்திரப்படி நல்லெண்ணை குளியலால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?

எண்ணெய் குளியலால் ஏற்படும் நன்மைகள் நல்லெண்ணை குளியலின் நன்மைகள்

  1. சனி தோஷம் விலகும்.
  2. சனியினால் ஏற்படும் வாதம் மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும்
  3. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.
  4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.
  5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என கூறினார்கள் பெரியோர்கள். ஆரோக்கியமாக இருப்பவர்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் காத்துக் கொள்ள வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பறவைகள் கனவு பலன்கள்

பறவைகளை கனவில் கண்டால் ஏற்படும் பலன்கள்

பறவை கனவு பலன்கள் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்களை பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளர்கள். அந்த வகையில் பல்வேறு விதமான பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம், பறவைகளை கனவில்...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
tamil brain games

Most intelligent riddles | puthirgal with Answers | Brain Teasers

மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்வி பதில்கள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.