வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம், செல்வம், நன்மை, சுபம் மற்றும் தெளிவான அறிவு போன்றவை கிடைக்கும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் மேலும், விளக்கேற்றி வழிபடுவதால் தீய சிந்தனைகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை விலகி அமைதியும், ஆனந்தமும் ஏற்படும்  என்பது ஐதீகம்.

விளக்கேற்றுவதால் வீட்டில் நல்ல வெளிச்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் கண்டுபிடிக்காத காலங்களில் கோயில்களில் அதிகளவில் விளக்கேற்றி வழிபட்டதால் தான் அங்கு இறைசக்தி நிலைகொண்டு நம் அனைவருக்கும் அருள் புரிகிறது. தற்போதும், அதே நடைமுறை கடைபிடிக்கப்படுவதை கோயில்களில் இன்றும் காணலாம். இந்நிலையில், நமது வீடுகளில் எங்கெங்கு விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்ற வேண்டும்

  • வீட்டு வாசலில் சாணம் தெளித்து , கோலமிட்டு அதன் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால், அந்த வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை கிடைக்கும்.
  • வீட்டிற்கு முன்பு நுழைவாயிலின் இரண்டு புறங்களிலும் இருக்கும் விளக்கு மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால் அந்த வீட்டிற்கு தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.
  • வீட்டில் விளக்கு மாடம் இல்லாதவர்கள் வீட்டின் நிலைப்படியில் 2 பக்கம் விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றுவதால் அந்த வீட்டில் தெய்வ சக்தி நிலைத்து நிற்கும்.
  • திருமண தோஷம்அடுக்குமாடி குடியிருப்பு, காம்பவுண்ட் வீடு, குடிசை வீடு என எந்த வீடாக இருந்தாலும் வீட்டின் நிலைப்படியில் கண்டிப்பாக விளக்கு ஏற்றுவது நல்லது.
  • அதையடுத்து வீட்டின் முற்றம் என அழைக்கப்படும் பெரிய இடத்தில் விளக்கு ஏற்றுவதால் அங்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
  • அதன் பின்னர், வீட்டின் சமையல் அறையில் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. அங்கு விளக்கு ஏற்றுவதால், அந்த வீட்டிற்கு அன்ன தோஷம் எதுவும் ஏற்படாது.
  • வீட்டில் பல இடங்களில் விளக்கேற்றி வழிபட வசதி இல்லாதவர்கள் கண்டிப்பாக பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதால் சர்வ மங்களத்தையும் கொடுக்கும். அனைத்து பலன்களும் கிடைக்கும். எனவே, அவசியம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது அந்த வீட்டிற்கு நன்மையை கொடுக்கும்.
  • வீட்டிற்கு பின் பகுதியில் அதாவது, கொல்லைப்புறத்தில் விளக்கேற்றி வழிபட ஆயுள் அதிகரிக்கும்.
  • மாட்டு தொழுவத்தில் விளக்கேற்றி வழிபடுவது பெரும் புண்ணியத்தை கொடுக்கும். ஏனெனில், அங்கே தான் லட்சுமி வாசம் செய்வதால் லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும், பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதால், அனைத்து தெய்வங்களின் அருளும், குல தெய்வ அருளும் சேர்ந்து கிடைக்கும்.
  • குப்பை போடும் இடத்தில் விளக்கு ஏற்றினால், துர் தேவதைகள் வாசம் இருக்காது
  • துளசி மாடத்தில் விளக்கேற்றி வழிபட விஷ்ணு பகவானின் அருளால் செழிப்பான வாழ்க்கை நிலை கிடைக்கும்.
  • இதை தவிர வீட்டின் திண்ணை, நடை மற்றும் தோட்டம் போன்ற இடங்களிலும் விளக்கேற்றி வழிபடுவதால் பெரும் சிறப்பு கிடைக்கும்.
  • ஒரு வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் இவ்வாறாக தினந்தோறும் விளக்கேற்றி வழிபடுவது என்பது சாத்தியமில்லாததாகும் என்பதால், வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மேஷ ராசி பொதுவான குணங்கள்

மேஷ ராசி பொது பலன்கள் – மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள் மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.  மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி...

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
தோப்புக்கரணம் பயன்கள்

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள் 

தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்  தோப்புகரணம் போடுவது இன்று உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது. ஆனால் அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால்...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...
கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.