சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா

நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை குடுமியுடன் பயன்படுத்த வேண்டுமா அல்லது குடுமியை அகற்றிவிட வேண்டுமா என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கும். ஆனால் இதை யாரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது என்று என பலருக்கும் தெரிவதில்லை. நம் முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்வோம் என்று தான் பலரும் செய்கின்றனர். தேங்காயை குடுமியுடன் பயன்படுத்துவதற்கு ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் காரணம் உண்டு. அது என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும் உடலின் ஓர் அங்கம்

பண்டைய காலங்களில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் வேதம் ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் குடுமியானது உடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டது. அதுபோல தேங்காயின் ஒரு உறுப்பாக வருவதுதான் குடுமி. அதை அகற்றி விட்டால் தேங்காய் ஊனமாகிவிடும். அதாவது இறைவனுக்கு படைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அது  ஊனம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே தான் தேங்காய் உடைக்கும்போது குடுமியுடன் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.

உடைத்த பிறகு

உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. உடைத்த பிறகு தேங்காய் உயிரற்றதாகிவிடுகிறது. உடைத்த பிறகு தான் குடுமியை அகற்ற வேண்டும். மேலும் தேங்காய் உடைத்த பிறகு இறைவனுக்கு படைக்கும் பிரசாதமாக கருதப்படுவதால் அவை குடுமி அகற்றி சுத்தமாக படைக்கப்பட வேண்டும்.

தேங்காய் உடைக்கும் போது ஏன் குடுமியை எடுக்க கூடாதுஇறைவனின் சிரசு

அதே போல கும்பாபிஷேகம், ஹோமங்கள் நடத்தும்போது கும்பம் வைத்து அதில் இறைவனை குடியிருத்துவர். குடமானது இறைவனின் திருமேனியாகவும், குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயானது இறைவனின் சிரம் அதாவது தலையாக கருதப்படுகிறது. தேங்காயில் இறைவனின் முகத்தை சந்தனத்தால் உருவாக்குவர்கள். அதற்கு தேங்காய் குடுமியுடன் இருக்க வேண்டியது அவசியம். எனவே தான் குடுமியுடன் கூடிய தேங்காயை கும்பத்தில் வைப்பது வழக்கம்.

அறிவியல் காரணம்

தேங்காயில் உள்ள குடுமியை எடுத்தால் அந்த தேங்காய் விரைவில் அழுகி பயனற்றதாகிவிடும். இதனால் நீண்ட காலம் வைத்து பயன்படுத்த முடியாது. இதனால் தான் தேங்காயில் உள்ள குடுமியை எடுக்க மாட்டார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...
உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
மகர ராசி

மகர ராசி பொது பலன்கள் – மகர ராசி குணங்கள்

மகர ராசி குணங்கள் மகர ராசியின் ராசி அதிபதி சனி பகவான் ஆவார். உத்திராடம் நட்சத்திரத்தின் 2, 3, 4 ஆம் பாதங்களும், திருவோணம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், அவிட்டம் நட்சத்திரத்தின் 1, 2...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
பங்குனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பனிரெண்டு தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் கடைசி மாதமாகும். சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதமாகும். இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தமிழ்கடவுள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.