விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம், விருச்சிகம்
விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு
விசாகம் நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன்
விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதத்தின் இராசி அதிபதி (விருச்சிகம்) : செவ்வாய்
விசாகம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை :- காளியம்மன்
விசாகம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் – : சிவன்
விசாகம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் :- ராட்ஷச கணம்
விசாகம் நட்சத்திரத்தின் விருட்சம் :- விளா மரம் (பாலில்லாத மரம்)
விசாகம் நட்சத்திரத்தின் மிருகம் :- பெண் புலி
விசாகம் நட்சத்திரத்தின் பட்சி :- பச்சைக்கிளி
விசாகம் நட்சத்திரத்தின் கோத்திரம் -: அகத்தியர்
விசாகம் நட்சத்திரத்தின் வடிவம்
விசாகம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 16வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘முறம்’ என்ற பெயரும் உண்டு. சுவாதி நட்சத்திரம் வான் மண்டலத்தில் முறம், சக்கரம் போன்ற வடிவங்களில் காணப்படும்.
விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
தமிழ் கடவுளான முருகன் அவதரித்தது இந்த விசாகம் நட்சத்திரத்தில் தான். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள். மற்றவர்களை தன் பால் கவர்ந்து இழுக்கும் வசீகரமான முக அமைப்பும், கட்டுமஸ்தான உடல்அமைப்பும் கொண்டவர்கள். கடமையுணர்வு கொண்டவர்கள். சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். பணம் மற்றும் பொருள் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவசிய செலவுகளுக்கு கணக்குப் பார்க்கும் இவர்கள், தேவையில்லாத செலவுகளுக்கு அதிக கவலைப்படமாட்டார்கள்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பார்கள். ஆனால் பொறாமையும், நட்பில்லாத பகைமை உணர்வும் இவர்களிடம் காணப்படும். இவர்கள் நல்ல அறிவுத் திறன் கொண்டவர்கள். தீவிர தெய்வ பக்தி கொண்டவர்கள். இவர்கள் தான, தருமங்கள் செய்வதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் போலித்தனம் இருக்காது. எதிலும் உண்மையாக இருப்பார்கள். மாறிவரும் காலத்திற்கேற்ப நவநாகரீக மோகத்தில் திளைத்திருப்பார்கள். வலுவான தேகம் கொண்டவர்கள்.
பெரியவர்களுக்கு நல்ல மரியாதையைக் கொடுப்பார்கள். அடங்கிப் போவதும் அடிமையாக இருப்பதும் தற்கொலைக்கு சமம் என்று நினைப்பவர்கள். ஆன்மிகவாதிகளாக இருந்தாலும் அனைத்து மதங்களையும் சமமாக நினைப்பவர்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாக இருக்கும். இவர்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்றுவது மற்றவர்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கும். இவர்களது குணம் சில சமயம் விசித்திரமாக இருக்கும். தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கொண்ட கொள்கைளிலிருந்து மாறமாட்டார்கள்.
சாமர்த்தியமான செயல்பாடுகளை உடையவர்கள். இவர்கள் நல்ல நீதிமான்களாக இருப்பார்கள். எல்லோரிடமும் அன்பாகவும், அடக்கமாகவும் பேசுவார்கள். இவர்கள் நல்ல குணவான்களாகவும், அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அடக்கமான, நிதானமான குணம் உடையவர்கள். பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். இவர்களுக்கு முன் கோபம் அதிகம் இருக்கும். தன்னை போலவே பிற உயிர்களையும் விரும்பி நேசிப்பார்கள். இவர்களுக்கு சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருக்கும்.
பழைய சம்பிரதாயங்களில் அதிக நாட்டமோ, ஈடுபாடோ இருக்காது. குடும்ப உறவிலிருந்து விலகி இருப்பார்கள். இவர்களுக்கு கொஞ்சம் பொறாமை குணம் உண்டு. சமுகத்தில் பல பெரிய மனிதர்களின் தொடர்பை வைத்திருப்பார்கள். தங்கள் சுய முயற்சியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். தியாக குணத்தை உடையவர்கள். இவர்களுக்கு வியாபாரத்தில் அதிக நாட்டம் இருக்கும். நியாயமான காரியங்களை செய்ய விருப்பமுடையவர்கள். குடும்ப வாழ்க்கையில் பற்றோடு இருந்தாலும் எதிர்காலத்தில் அதிருந்து விலகி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாட்டோடு ஈடுபடுவார்கள்.
விசாகம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பொருட்செல்வம் மற்றும் உறவினர்களின் அன்பை கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் சுகமாக இருப்பதையே விரும்புவார்கள். பிறர் போல பொன், பொருளை மட்டும் விரும்பாமல் உறவுகளையும் விரும்புவார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். தம் வேலைகளை தாமே செய்யக்கூடியவர்கள். வஞ்சக எண்ணம் கொண்டவர்கள். சிறந்த வியாபாரிகள். எளிதில் உணர்ச்சி வசபடகூடியவர்கள். பிறரை அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள்.
விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். தற்புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள். உண்மை மட்டுமே பேச வேண்டும் என விரும்புபவர். நல்ல அறிவாளிகாளாக இருப்பார்கள். சுயநலம் கொண்டவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழக்கூடியவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் தன்னைத்தானே உயர்த்தி பேசுவர். வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழ்வார்கள்.
விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நல்ல உடல் வலிமை கொண்டவர்கள். கணித துறையில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு வாழக்கூடியவர்கள். எளிதில் மற்றவர்களை நம்பமாட்டார்கள். உயர் பதவிகளை வகிப்பார்கள். புகழுடன் வாழக்கூடியவர்கள். இவர்கள் நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள். புகழுடன் வாழ வேண்டும் என விரும்புவார்கள்.
விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். செல்வ வளம் உடையவர்கள். எதன் மீதும் பற்று இல்லாதவர்கள். இவர்கள் உயரமானவர்களாக இருப்பார்கள். நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள். தாராளமாக செலவு செய்வார்கள். குடும்பத்தின் மீது அன்பு கொண்டவர்கள். கௌரவமான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். பணம் சம்பாதிப்பதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.