எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல்

மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், ‘ஏ, பி’ ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும். உடலுக்கு நன்மை தரக்கூடிய எள்ளுத் துவையல் எப்படி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

எள்ளு துவையல் செய்வது எப்படி 
தேவையான பொருட்கள்

கருப்பு அல்லது வெள்ளை எள் – 1/2  கப்

உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

கடுகு – ¼ ஸ்பூன்

பூண்டு – 2 பல்

காய்ந்த மிளகாய் – 5

தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

புளி – எலுமிச்சை பழ அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • எள்ளு துவையல் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை சூடு செய்து அதில் எள்ளை சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வாணலியில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
  • எண்ணெய் சூடானதும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பின் பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும்.
  • சிறிது நேரம் சூடு ஆறியதும் வறுத்து பொருட்களை மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
  • அத்துடன் வறுத்து வைத்துள்ள எள்ளை சேர்க்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தாளிப்பு கரண்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்த்து பரிமாறினால் சுவையான எள்ளுத் துவையல் ரெடி.

 

 

.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன் மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன் மகம் நட்சத்திரத்தின் பரிகார...
banana halwa recipe

வாயில் வைத்த உடன் கரையும் வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா தேவையான பொருள்கள் வாழைப்பழம் – 3 பால் – 1 கப் சர்க்கரை – ½ கப் நெய் – ¼ கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன்...
ஜாதிக்காய் மருத்துவ நன்மைகள்

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

ஜாதிக்காய் வரலாறு ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல்...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
கனவில் பூச்சிகளை கண்டால்

பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.