ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

ஆட்டுக்கறி குடல் குழம்பு செய்வது எப்படி

ஆட்டுக் குடல் நம் வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் குடலை அடிக்கடி நாம் சமைத்து சாப்பிடும் போது உடல் சூட்டினால் உண்டாகும் பாதிப்புகள் குறையும், உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரி செய்யும். சுவையான ஆட்டுக் குடல் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

போட்டிக் குழம்பு தேவையான பொருட்கள்

 1. ஆட்டு கறி குடல் – 500 கிராம்
 2. வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
 3. தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
 4. தேங்காய் துருவல்  – 1 கப்
 5. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
 6. பட்டை – 1 துண்டு
 7. கிராம்பு – 2
 8. சோம்பு – 1 ஸ்பூன்
 9. கசகசா – 1 ஸ்பூன்
 10. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
 11. மல்லித்தூள் – 1 ஸ்பூன்
 12. கரம் மசாலா – ½ ஸ்பூன்
 13. உப்பு  – தேவையான அளவு
 14. எண்ணெய் – தேவையான அளவு
 15. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )

செய்முறை

 1. முதலில் ஆட்டு குடலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
 2. ஆட்டுக் குடலை சுத்தம் செய்யும் போது சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.
 3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 4. குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 5. எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
 6. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 7. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வரும் வரை வதக்கவும்.
 8. வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 9. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வர நன்கு வதக்கி கொள்ளவும்.
 10. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்க்கவும்.
 11. மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
 12. இப்போது சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துள்ள ஆட்டு குடலை இத்துடன் சேர்க்கவும்.
 13. ஆட்டுக் குடலை சேர்த்து நன்கு வதக்கவும்
 14. ஆட்டுக் குடலுடன் மசாலா நன்கு சேரும் வரை வதக்கி விடவும்.
 15. ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
 16. அரைத்த தேங்காய் மசாலாவை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
 17. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
 18. விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கைப்படி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறினால் சுவையான ஆட்டுக் குடல் குழம்பு தயார்.
 19. இந்த ஆட்டுக் குடல் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...
chettinadu special chicken grevy

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் -  ½ கிலோ தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது – 2...
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...
மச்ச சாஸ்திர பலன்கள்

நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம் சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ,...
தசமி திதி

தசமி திதி பலன்கள், தசமி திதியில் செய்ய வேண்டியவை

தசமி திதி தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும்...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.