ஹோட்டல் சுவையில் தக்காளி சிக்கன் கிரேவி

தக்காளி சிக்கன் கிரேவி

இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடக்கூடிய ருசியான தக்காளி சிக்கன் கிரேவி சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சிக்கன் கிரேவிதேவையான பொருட்கள்

 1. சிக்கன் – ½ கிலோ
 2. வெங்காயம் – 3
 3. தக்காளி – 4
 4. மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
 5. மிளகு தூள் – ½ ஸ்பூன்
 6. சீரகம் – ½ ஸ்பூன்
 7. பூண்டு – 10 பல்
 8. உப்பு – தேவையான அளவு
 9. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

 1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
 2. சீரகம், மிளகு, மிளகாய்த்தூள், பூண்டு, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
 4. எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 5. வெங்காயம் வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு 2 நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
 6. சிக்கன் ஓரளவிற்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
 7. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
 8. சிக்கன் வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையான தக்காளி சிக்கன் கிரேவி தாயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திதி என்றால் என்ன

திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும் நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ? காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம்...
riddles in tamil

Most intelligent Puthirgal | Puzzles with Answers | Brain games

மூளைக்கு வேலை தரக்கூடிய கேள்விகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...
பல்லி விழும் தோஷம்

பல்லி விழுந்தால் தோஷமா? பல்லி தோஷத்திற்கான வழிபாடு

பல்லி விழுந்தால் தோஷமா? மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் ஏற்படும். மனிதர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உண்டு. நல்ல விஷயங்களை பற்றி பேசும்போது பல்லி கத்தினால்...
ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.