தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்
தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம். அதிரசம் செய்வதற்கு முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது பாகுபதம் சரியாக இருக்கிறதா என்பது தான். அது தேர்ந்து விட்டால் அதிரசம் செய்வது மிகவும் சுலபம். சுலபமாக வீட்டிலேயே அதிரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 2
நல்லெண்ணெய் – சிறிதளவு
செய்முறை
- அதிரசம் செய்ய முதலில் ஒரு கப் பச்சரிசியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
- சுத்தம் செய்த பச்சரிசியை நன்கு கழுவி 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3 மணி நேரம் அரிசி நன்கு ஊறிய பிறகு அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் பொட்டு காய வைக்கவும்.
- அரிசி முழுவதுமாக காயாமல் சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போதே எடுத்து ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
- பின்னர் வெல்லப்பாகு தயார் செய்ய 3/4 கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்குகாய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் கொஞ்சம் ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.
- பச்சரிசி மாவில் தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகினை சேர்க்கவும்.
- வெல்லப்பாகு சூடாக இருக்கும்போதே மாவில் சேர்க்க வேண்டும்.
- வெல்லபாகு சேர்த்த பின் நன்கு கட்டிகள் இல்லதவாறு கலந்து கொள்ளவும்.
- தொடர்ந்து மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே மூடி வைக்கவும்.
- மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும்.
- அதிரச மாவை வட்டமாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.
- அதிரசத்தை எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கும் போது, அடுப்பபை மிதமான சூட்டில் வைக்கவும். அப்போதுதான் அவை நன்கு வெந்து இருக்கும்.
- அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதன் மேல் ஒரு கரண்டியை வைத்து அழுத்தி எண்ணெய்யை வடித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி.