சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம்
சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்
சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி – கன்னி : புதன்
சித்திரை 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி – துலாம் : சுக்கிரன்
சித்திரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : விஸ்வகர்மா
சித்திரை நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : முருகன்
சித்திரை நட்சத்திரத்தின் நட்சத்திரகணம் : ராட்சஸகணம்
சித்திரை நட்சத்திரத்தின் விருட்சம் : வில்வமரம்
சித்திரை நட்சத்திரத்தின் மிருகம் : ஆண்புலி
சித்திரை நட்சத்திரத்தின் பட்சி : மரங்கொத்தி
சித்திரை நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்

சித்திரை நட்சத்திரத்தின் வடிவம்

சித்திரை நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 14வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘அறுவை’ என்ற பெயரும் உண்டு. சித்திரை நட்சத்திரம் வான் மண்டலத்தில் முத்து, புலியின் கண் போன்ற வடிவங்களில் காணப்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல குணம் கொண்டவர்கள். தான, தர்ம எண்ணம் உடையவர்கள். எல்லோருக்கும் நண்பர்கள். படிப்பும், அறிவும், பணமும் படைத்த இவர்கள் சத்தியவானாக இருப்பார்கள். வாக்கு வல்லமை உடையவர்கள். சேமிப்பதில் வல்லவர்கள். எதிலும் நிதானமானவர்கள். எடுத்து கொண்ட வேலையை முடிப்பதில் வல்லவர்கள். இவர்கள் கடின உழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், பொருள் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குவார்கள். பிறருடைய விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்க மாட்டார்கள். தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பார்கள். வாசனை பொருட்களின் மேல் அதிக ஈடுபாடு இருக்கும். பரந்த உள்ளம் கொண்டவர்கள்.

இவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமயத்தின் மீது சமயப்பற்றும், தெய்வ பக்தியும் கொண்டிருப்பார்கள். இவர்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவ்வளவு எளிதில் சேமித்து வைத்திட முடியாது. இவர்களுக்கு மன மகிழ்ச்சி தரகூடிய மனைவியும், குழந்தைகளும் அமைந்திடுவார்கள். தங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்த முயல்வார்கள். சில சமயங்களில் முன் யோசனை இல்லாமல் தங்கள் மனதில் தோன்றும் கருத்தை சொல்லி விடுவார்கள். அதனால் பெரும்பலனோர்க்கு பேருக்கு இவர்களை பிடிக்காது. வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் நாட்டம் உடையவர்கள். தற்புகழ்ச்சியில் விருப்பம் உடையவர்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த அறிவாளிகள். ஆனால் அவர்கள் செய்யும் செயலில் முரட்டுத்தனமும், குரலில் கடுமையும் தெரியும். மற்றவர்களை பற்றி இவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. கட்டிடங்கள் கட்டுவது, வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில் இவர்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும். இவர்கள் பலர் பருமனான உடல் வாகு கொண்டிருப்பார்கள். உடனிருப்பவர்கள் தவறு செய்தால் அதை கண்டித்து திருத்துவார்கள். சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சொல்லும் சில விஷயங்கள் மூடத்தனமாக தோன்றும். ஆனால் அதுதான் எதிர்காலத்தில் நடக்கும். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வார்கள்.

இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் இவர்களின் முன்னேற்றத்தை எந்த வகையிலும் பாதிக்காது. தன்னுடைய தைரியம், கடின உழைப்பு, அறிவுக் கூர்மை துணை கொண்டு எதிலும் வெற்றி காண்பார்கள். குடும்ப பாசம் அவ்வளவாக இருப்பதில்லை. அல்லது குடும்பத்தினரால் அதிக நன்மைகள் கிடைப்பதில்லை. சொன்ன சொல்லை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போக துணிந்தவர்கள். நல்ல கூர்மையான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பரத்தில் நாட்டம் இருக்கும். இவர்களுக்கு தைரியம் உடன் பிறந்ததாகும்.

சித்திரை நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் சிறந்த கல்வியறிவு கொண்டவர்கள். சிறந்த ஞானம் உடையவர்கள். திறமை உடையவர்கள். கடமையுணர்வு கொண்டவர்கள். கடும் உழைப்பு உடையவர்கள். இயல்பாகவே இவர்கள் கடும் உழைப்பாளிகள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருக்க மாட்டார்கள். துணிச்சல் குறைவானவர்கள். மற்றவர்கள் சார்ந்து இருந்தால் இவர்கள் வெற்றியாளர்கள். சரியான துண்டுகோல் இருந்தால் எதிலும் ஜெயிப்பார்கள்.

சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நல்லவர்கள். தெய்வபக்தி அதிகம் இருக்கும். அறவழியில் நடப்பவர்கள். தன்னம்பிக்கை குறைவானவர்கள். நல்ல உயரமானவராகவும் இருப்பார்கள். இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும். இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் சஞ்சலமான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் குணமுள்ளவர்கள். நல்ல அறிவு உடையவர்கள். உதவும் குணம் உடையவர்கள். நல்லதையே செய்ய விருப்பம் உடையவர்கள். தைரியமுள்ளவர்கள். உதவும் குணம் கொண்டவர்கள். குடும்பத்தை அதிகமாய் நேசிப்பார்கள்.

சித்திரை நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பகைவரை நேசிப்பவர்கள். சுயபுத்தி உடையவர்கள். வீரம் நிறைந்தவர்கள். எடுத்து கொண்ட காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்து விடுவார்கள். சிறந்த பேச்சாளர்கள். வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியுடையவயர்கள். தலைமை பதவி வகிக்கும் குணம் உடையவர்கள். சுயமாக முடிவு எடுப்பதில் வல்லவர்கள். இவர்களுக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். கோப குணம் உள்ளவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...
elumbu theimnaththai sari seyyum unavugal

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

எலும்பு தேய்மானம் எலும்புகள் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்புகள் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களுக்கு வயது மூப்பு ஏற்படும்போது...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
பெண் கை மச்ச பலன்கள்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கை மச்ச பலன்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடத்தை வைத்து பலவகையான பலன்கள் சொல்லபட்டுள்ளது. மச்சம் தோன்றும் இடத்தை பொருத்து நல்ல பலன் மற்றும் தீய பலன் போன்றவை ஏற்படுகின்றன. அந்த...
வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

திருஷ்டி கழிப்பது எப்படி வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும்....
நரை முடி வராமல் தடுக்க

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ் நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். உணவு பழக்க வழக்கத்தில் சில...
தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.