உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்து உலக அளவில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். உருளையானது பல்லாண்டு வாழ்கின்ற பூண்டுத் தாவரமாகும். உருளையின் தரைகீழ் கிளைகளின் பருத்த நுனிப்பகுதியே கிழங்காகும்.

potato uses in tamil

உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

உருளைகிழங்கில் கலோரி – 70%, புரதச்சத்து – 0 கிராம், நார்ச்சத்து – 2.1 கிராம், இரும்புச்சத்து – 0.81 மி.கிராம், கால்சியம் – 12 மி.கிராம்,
சோடியம் – 6 மி.கிராம், பொட்டாசியம் – 421 மி.கிராம், சர்க்கரை – 0.8 கிராம் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் B6, C போன்றவையும் நிறைந்துள்ளன.

உருளைகிழங்கின் நன்மைகள்:-

உடல் எடையை அதிகரிக்கும்:

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரதம் குறைந்த அளவும் உள்ளன. எனவே ஒல்லியாக இருப்பவர்கள் உருளைகிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

செரிமானம் எளிதாகும்:

உருளையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு உருளையானது சிறந்த உணவாகும்.

சருமத்தை பாதுகாக்கும்:

வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. இவை அனைத்தும் உருளைகிழங்கில் நிறைந்துள்ளன. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

உருளைகிழங்கின் மருத்துவ குணங்கள்

கீழ்வாதம் நீங்கும்:

உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இது கீழ்வாதம் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வேகவைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நல்ல நிவாரணம் அளிக்கும். ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிகளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். எனவே இதை குறைந்த அளவு எடுத்து கொள்வதே பாதுகாப்பாகும்.

அழற்சி மற்றும் வீக்கத்தை தீர்க்கும்:

உட்புற மற்றும் வெளிப்புற வீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்ற மருந்தாக உருளை விளங்குகிறது. இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் அடைய கூடியதாக இருக்கும். மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், குடல்களில் மற்றும் செரிமானம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் அழற்சி பிரச்சனைகளை தீர்க்கும்.

வாய் புண்னை தீர்க்கும்:

வாய் புண் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். பச்சை உருளைகிழங்கை அரைத்து வாய் புண்களின் மேல் தடவி வந்தால் வாய் புண்ணிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூளை செயல்பாடு அதிகரிக்கும்:

மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன், வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கில் மேற்கூறிய அனைத்தும் இருப்பதால் மூளையின் செயல்பாடு மேம்படும்.

இதய நோய்களை தீர்க்கும்:

உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளன. இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது. இருப்பினும் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டுவதாலும், இதை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரித்து விடும்.

வயிற்றுப் போக்கை நீக்கும் :

வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு சிறந்த உணவாகும். ஏனெனில் உருளை எளிதில் செரிமானம் அடையும். இருப்பினும் இதை அதிகமாக எடுத்து கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் உடலின் உள்ளே செல்லுவதால் வயிற்றுப்போக்கு குறைவதற்கு பதில் அதிகரிக்கச் செய்யும்.

தீ புண்களுக்கு சிறந்தது :

உருளைக்கிழங்கின் சாற்றை, தீ புண்கள், சிராய்ப்புகள், சுளுக்கு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உருளைகிழங்கின் நன்மைகள்

பக்க விளைவுகள்:-

1. பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதில் ஓலனைன், சாக்கோனைன் மற்றும் ஆர்செனிக்(Arsenic) போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

2. முளைத்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிட்டால் தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயேரியா போன்றவை ஏற்படும்.

3. உருளையை அதிகம் உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டும். இதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளும் உருளையை தவிர்ப்பது நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...
அடை பிரதமன் செய்வது எப்படி

கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் செய்முறை

அடை பிரதமன் தேவையான பொருட்கள் அரிசி  - 50 கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் பால் – 200 கிராம் தேங்காய் துண்டுகள் - தேவையான அளவு முந்திரி - ...
லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின்...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....
கார்த்திகை தீபம் விளகேற்றும் முறை

கார்த்திகை தீபம் விளக்கேற்றும் முறை மற்றும் பலன்கள்

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீட்டில் தீபம்...
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.