கேழ்வரகு சேமியா இட்லி
கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு பெரிதும் உதவும். உடல் எடை குறைப்பதிலும் கேழ்வரகு பெரும் பங்கு வகிக்கிறது.
தேவையானவை
- கேழ்வரகு சேமியா – 1 கப்
- வறுத்த ரவை – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
- கேழ்வரகு சேமியாவை இரண்டு தடவை தண்ணீர் விட்டு சுத்தம் செய்துவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிட வேண்டும்.
- ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடித்து விட வேண்டும்.
- சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும். ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
- ஒரு பாத்திரத்தில் ஊறிய சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்க வேண்டும்.
- ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவர வேண்டும்.
- பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
- வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும். கரமான பூண்டு சட்னியும் நன்றாக இருக்கும்.