ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். விதவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும் மட்டன் பிரியாணிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதுவும் ஒவ்வொரு பகுதிகேற்ப ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கபடுகிறது. அதற்கேற்றாற்போல் தனித்தன்மை கொண்ட சுவை கொண்டதாக இருக்கும். அந்த வகையில் ஹைதராபாத் மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்முறை

தேவையான பொருட்கள்

1. பிரியாணி அரிசி – 2 கப்
2. மட்டன் – 1/4 கிலோ
3. பெரிய வெங்காயம் – 2
4. பச்சை மிளகாய் 4
5. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
6. சின்ன வெங்காயம் – 5
7. பப்பாளி – 1 சிறிய துண்டு (நைசாக அரைத்து கொள்ளவும்)
8. தயிர் – ½ கப்
9. மிளகாய்த்தூள் – 1 மேஜைக்கரண்டி
10. கரம் மசாலா – ½ மேஜைக்கரண்டி
11. பட்டை – 2 துண்டு
12. கிராம்பு – 4
13. ஏலக்காய் – 3
14. புதினா – 1 கைப்பிடி அளவு
15. எலுமிச்சம் பழ சாறு – 1 மேஜைக்கரண்டி
16. ஜாதிக்காய்த்தூள் – ¼ மேஜைக்கரண்டி
17. மஞ்சள் தூள் – ½ மேஜைக்கரண்டி
18. பால் – 2 மேஜைக்கரண்டி
19. முந்திரி – 7
20. குங்குமப்பூ – சிறிதளவு
21. நெய் – தேவையான அளவு
22. உப்பு – தேவையான அளவு
23. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய்களை இரண்டாக கீறி கொள்ளவும்.

2. பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.

3. மட்டனை நன்றாக சுத்தம் செய்து அதனுடன் அரைத்த மசாலா பொடிகள், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, அரை மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், புதினா, 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

4. பிரியாணி அரிசியைக் நன்றாக கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

5. அரைத்தது போக மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி அரிசியை முக்கால் பதம் வேக வைத்து வடித்து எடுத்து கொள்ளவும்.

6. வெங்காயத்தை பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

7. பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் ஊற வைத்த மசாலாக்கள் சேர்த்து ஊறவைத்த மட்டனை அப்படியே அதனுடன் கொட்டி வதக்கவும்.

8. மேற்கூறியவை நன்கு வதங்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டன் நன்றாக வேக வைக்க வேண்டும்.

9. மட்டன் நன்றாக வெந்ததும், அதில் வேகவைத்து வடித்த சாதம், வதக்கிய வெங்காயம், புதினா, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும்.

11. தம் போட தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும். இதை 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

10. 20 நிமிடம் கழித்து பாலில் குங்குமப் பூவை கரைத்து, அதை பிரியாணியில் மூடி வைத்து கொள்ளவும்.

11. முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பறிமாறினால் சூப்பரான, மற்றும் சுவையான ஹைதராபாத் மட்டன் பிரியாணி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது...
பிறந்த மாத பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள்...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...
கண் திருஷ்டி நீங்க

உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட... கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு... 1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.