இஞ்சி துவையல்
இஞ்சி துவையல் ஜீரண சக்தியை தூண்டுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- இஞ்சி – 50 கிராம்
- தேங்காய் துருவல் – ¼ கப்
- காய்ந்த மிளகாய் – 4
- புளி – சிறிதளவு
- உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
- கடுகு – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- பூண்டு பல் – 10
- உப்பு – தேவையான அளவு.
- வெல்லம் – சிறிதளவு
செய்முறை:
- இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு பல் , தேங்காய் துருவல், நறுக்கிய இஞ்சி துண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கிய பின் இறக்கி ஆற வைக்கவும்.
- சூடு ஆறிய பின் வதக்கிய பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
- இத்துடன் சிறிதளவு புலி, வெல்லம், தேவையான அளவு உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சிறிதளவு கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை துவையலில் சேர்த்து பரிமாறினால் சுவையான இஞ்சி துவையல் ரெடி.