உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம்
உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு
உத்திராடம் நட்சத்திரத்தின் 2, 3 மற்றும் 4ம் பாதத்தின் இராசி அதிபதி (மகரம்) : சனி
உத்திராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை :- கணபதி
உத்திராடம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் :- துர்க்கை
உத்திராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் :- மனுஷ கணம்
உத்திராடம் நட்சத்திரத்தின் விருட்சம் :- பலா மரம்
உத்திராடம் நட்சத்திரத்தின் மிருகம் :- ஆண் கீரி
உத்திராடம் நட்சத்திரத்தின் பட்சி :- வலியான்
உத்திராடம் நட்சத்திரத்தின் கோத்திரம் :- வசிஷ்டர்

உத்திராடம் நட்சத்திரத்தின் வடிவம்

உத்திராடம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 21வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘கடைகுளம்’ என்ற பெயரும் உண்டு. உத்திராடம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் ‘கட்டில்’ வடிவத்தில் காணப்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நுணுக்கமான பேச்சுத்திறமை உடையவர்கள். கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம் படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும் விளங்குவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள். சேமிப்பில் விருப்பம் உடையவர்கள். சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்கள். மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலிகள். மனதில் பட்டதை எவ்வித ஒளிவு, மறைவும் இல்லாமல் பேசக்கூடியவர்கள். தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். இனிய சொற்களை பேசக்கூடியவர்கள். உணவில் விருப்பம் உடையவர்கள். பிறர் பொருளை விரும்பமாட்டார்கள்.

இவர்கள் மென்மையானவர்கள் மற்றும் உண்மையானவர்கள். எதையும் மூடி மறைத்து செய்யும் குணம் இல்லாதவர்கள். எல்லோரிடமும் திறந்த புத்தகம் மாதிரி பழகுவார்கள். மற்றவர்களை ஏமாற்றமாட்டார்கள். இவர்கள் யாரையும் முழுவதுமாக நம்பி விட மாட்டார்கள். நம்பிக்கை வைப்பது கடவுளிடம் மட்டும் தான். எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். செய் நன்றியை மறக்க மாட்டார்கள். எதையும் அவசரபடாமல் பொறுமையாக செய்வார்கள். எதையும் மெதுவாக செய்வதால் மற்றவர்கள் இவர்களை சோம்பேறிகள் என்று கூட சொல்வதுண்டு. இவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். இவர்கள் தங்கள் 31 வது வயதுக்குப் பின், மிகுந்த அதிருஷ்டசாலியாக விளங்குவார்கள்.

இவர்களுக்கு அவ்வளவு எளிதில் கோபம் வராது, அப்படியே
கோபம் வந்தால் கூட எதிராளியின் மீது கடுமையான வார்த்தைகளை பேசமாட்டார்கள். இவர்கள் எதாவது தவறு செய்து அதை யாரேனும் சுட்டிக்காட்டினால், அந்தத் தவறுகளை ஏற்றுக்கொண்டு, தான் செய்த தவறுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்டு விடுவார்கள். இவர்கள் கம்பீரமான நடையை கொண்டவர்கள். யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பிறர் சீண்டினால் அதற்கு தக்க பதிலடி தர தயங்க மாட்டார்கள். சேமிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். தனது காரியங்களை சாதித்து கொள்வதில் வல்லவர்கள். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்து இருக்கும்.

இவர்கள் இவர்கள் மிகுந்த மன வலிமை மற்றும் வைராக்கியம் கொண்டவர்கள். உண்மைகளை பேச வேண்டும் என்னும் கொள்கையை உடையவர்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். பகிர்ந்து வாழ்வதில் சிறந்தவர்கள். கலைகளில் ஆர்வம் உடையவர்கள். இசையிலும் நடனத்திலும் இவர்களுக்கு இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள். இதனால் எதிரிகளை நிறைய சம்பாதிப்பார்கள். சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் அழகு மிகுந்தவர்கள். ஞானத்தில் சிறந்தவர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். சிறந்த வழிகாட்டிகள். கொடைத்தன்மை உடையவர்கள். இரக்கமும், கருணை உள்ளமும் கொண்டவராய் இருப்பார்கள். சாஸ்திரங்களில் விருப்பம் உடையவர்கள். குருவை உபசரிப்பவர்கள். நல்ல புத்தி கூர்மை உடையவராய் இருப்பார்கள். சகல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள்.

உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் வாக்குச் சாதுர்யம் மிகுந்தவர் தன்னை தானே உயர்வாக பேசுவார்கள். ஆசை மிகுந்தவர்கள். திடமான உறுதி கொண்டவர்கள். தாராள மனப்பான்மை உடையவர்கள். மேன்மையான காரியங்களை ரகசியமாக செய்பவர்கள். பணத்தை தேவை இல்லாமல் செலவு செய்வார்கள். எதிரிகளை பழிக்கு பழி வாங்குவார்கள். தோல்வியை தாங்கும் அளவுக்கு இவர்களுக்கு மனபக்குவம் இருக்காது.

உத்திராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் பிறருக்காக தங்கள் இயல்பை மாற்றி கொள்ள மாட்டார்கள். கல்வியில் சிறப்பானவர்கள். சாதுரியமாக பேசுபவர்கள். சற்று குண்டான உடல் அமைப்பை கொண்டவர்கள். கலங்கிய மனம் உடையவர்கள். இவர்கள் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள். தனித்திறமை உள்ளவர்கள். கருணை, இரக்கம், தர்ம சிந்தனை போன்றவை இவர்களின் இயல்பு. சிறந்த விற்பனையாளர்கள். உறவினர்களிடம் அன்புள்ளவர்கள். இவர்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நல்ல தொடர்பில் இருப்பார்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறால் வடை செய்முறை

சுவையான இறால் வடை

இறால் வடை தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம் கடலைபருப்பு – 250 கிராம் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் -  5 ( பொடியாக...
காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #10

ஜாதக யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது...
தார தோஷம் நீங்க

தார தோஷம் என்றால் என்ன? தார தோஷத்திற்கான பரிகாரம்

தார தோஷம் என்றால் என்ன? தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வது ஸ்தானமான கணவன்...
கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...
சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.