6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்

6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். நேர்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள்.

6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

இன்பம், பணம், சுகமான வாழ்க்கை, அனுபவங்கள் இவற்றை நோக்கியே இவர்கள் ஓடுவார்கள். சுயநலம் மிகுந்தவர்கள். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். எதையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய பொருளையும் தன்னலம் கருதாமல் விட்டு கொடுப்பார்கள். எப்போதும் இவர்கள் அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள்.

பொறுமை நிறைந்தவர்கள். அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். தன்னம்பிக்கையும், எதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். இவர்கள் பேச்சில் சாதுர்யம் மிகுந்திருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்தியசாலிகள். கஷ்டப்பட்டு உழைப்பதில் இவர்களுக்கு விருப்பம் இருக்காது.

பிடிவாத குணம் கொண்டவர்கள். பிறருக்கு அடிமை வேலை பார்ப்பது இவர்களுக்கு சிறிதும் பிடிக்காது. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். யாருடைய பணமாவது இவர்கள் கையில் இருந்து கொண்டே இருக்கும். எந்த காரியத்தில் இறங்கினாலும் அதில் ஏற்பட போகும் லாப, நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பிறகுதான் செயலில் இறங்குவார்கள்.

மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்கள் மனதை புண்படுத்தும்படியான பேச்சுகள் இவர்களிடம் உண்டு. ஆனால் யாராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது. கோப குணம் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.

உடலமைப்பு

மற்றவர் கண்களுக்கு தாங்கள் அழகாக காட்சியளிக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு கூரிய காந்த பார்வை உண்டு, இவர்களின் பார்வை மற்றவர்களை கவரும் விதத்தில் அமைந்திருக்கும். தலை உருண்டையாகவும், கண்கள் சதைப்பற்று மிகுந்தும் இருக்கும். இவர்களுக்கு நன்கு சுருண்ட தலைமுடி இருக்கும்.

இவர்களுடைய பற்கள் சீரான இடைவெளியில் அழகாக அமைந்திருக்கும். எப்போதும் அமைதியுடன் கூடிய முக அமைப்பை கொண்டிருப்பார்கள். உடலில் கருமை படர்ந்த வெண்மையான ரோமங்கள் பதிந்திருக்கும். இவர்களின் தோரணையில் கம்பீரம் கலந்திருக்கும். காலத்திற்கேற்ற உடலமைப்பும், கவர்ச்சியும் கொண்டிருப்பார்கள்.

குடும்பம் உறவுகள்

தந்தைவழி உறவுகளிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தந்தையின் வாழ்க்கையில் இவர்களால் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் ஆதரவும், மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். தொழில் சார்ந்த ஆதரவுகள் தாய்வழி உறவுகளின் மூலமாக அமைய பெறுவார்கள். சகோதர, சகோதரிகள் இவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

நண்பர்கள்

6, 9 தேதிகளில் பிறந்தவர்கள் இவர்களின் நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களாலும் ஓரளவு நன்மை உண்டாகும். 3 எண்காரர்களின் தொடர்பும் கூட்டும் அறவே கூடாது. ஆனால், 3ம் எண்காரர்களால் தான் இவர்களுக்கு மிகப் பெரிய உதவிகள் கிடைக்கும். ஆனால் அவை திட்டமிடப்பட்டதாக இல்லாமல் இயல்பாகவே எதிர்பாராமல் அமையும்.

இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம் உண்டு. இவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் அதாவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரிடமும் நட்பை பெற்றிருப்பார்கள். ஆண் பெண் பேதமில்லாமல் அனைவரிடமும் சரி சமமாக பழகக்கூடியவர்கள்.

தன்னை நம்பியவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். நண்பர்களின் உதவியால் இவர்கள் தொழில் துறையில் பெரும் லாபம் அடைவார்கள். பொதுவாக 9, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்ளலாம்.

திருமண வாழ்க்கை

திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

இவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து சுகங்களும் உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். காதலும், இன்பமும் கலந்த ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள். இவர்களுடைய வாழ்க்கைத்துணை அழகாவும், நல்ல குணத்துடனும் தன்னுடைய வாழ்க்கைத்துணைவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இருக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள். உறவினர்களிடம் சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து அவர்களுடன் ஆதரவையும், நட்புறவையும் எப்பொழுதும் பாதுகாத்து கொள்ளக்கூடியவர்கள்.

தொழில்

சினிமா, நாடகம், இசை போன்ற பொழுதுபோக்கு சார்ந்த துறைகள், துணிக்கடை, நகைக்கடை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம், சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறை, அலங்காரப் பொருட்கள், பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு, வக்கீல்கள், நீதிபதிகள், கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள் தொடர்பான வியாபாரங்களிலும், வேலைகளிலும் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் தொடர்பான தொழில்கள், முத்து, பவளம், வைர வியாபாரம், ஒப்பனை, மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, உணவு விடுதி, தங்கும் விடுதி நடத்துதல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு, தையல் நிலையங்கள் போன்ற தொழில்கள் இவர்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட தினங்கள்

எண் கணிதம் எப்படி பார்ப்பது

ஒவ்வொரு மாதத்திலும் வரும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டமானவை. கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களை கொடுக்கும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்ட வசமானவை. நடுத்தரமான பலன்களே கிடைக்கும்.

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

இவர்களுக்கு மரகதம் சிறந்த பலனை கொடுக்கும். இதை ஆங்கிலத்தில் EMERALD என்பார்கள். மேலும் AQUAMAIRNE, JADE, BERYL, PARIDOT, TURQUOISE போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்களாகும். இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.

ஆரோக்கியம் – நோய்

உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும். இதய பலவீனம், இரத்த தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். பிறப்புறுப்பு கோளாறுகள், மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். அஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். புகைப்பிடித்தல், மது போதைப் பொருட்கள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

மூச்சு தொந்தரவுகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் போன்றவற்றை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

தேதி வாரியாக பொதுவான பலன்கள்

6-ம் தேதி பிறந்தவர்கள்

எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். யாரை எப்படி அணுகினால் தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்ற விதை தெரிந்தவர்கள். இந்த தேதியில் பிறந்த ஆண்களுக்கு பெண் தன்மை காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. சாந்தமான குணம் கொண்ட இவர்கள் கோபம் வந்தால் விசுவரூபம் எடுப்பார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள்.

15-ம் தேதி பிறந்தவர்கள்

மக்களை வசீகரிக்கும் தன்மை இயல்பாகவே இவர்களுக்கு உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் கொண்டவர்கள். கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் உணர்வும் கொண்டவர்கள். எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமைசாலிகள். ஆனால் எதிரிகளை ஒரு எப்போதும் மறக்க மாட்டார்கள். பொறுமையுடன், தனக்கான காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.

24-ம் தேதி பிறந்தவர்கள்

அடக்கமும், அமைதியும், அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் சவாலாக ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள். தனக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையை அனுபவித்து வாழும் அதிர்ஷ்டசாலிகள் இவர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
how to reduce belly fat

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை...
பிறந்த மாத பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள்...
கனவுகள் உண்மையா

கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே...
ஏகாதசி திதி

ஏகாதசி திதி பலன்கள், ஏகாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

ஏகாதசி திதி ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின்...
சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...
பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம் தோஷங்களில் மிக கடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரியன், மற்றும் சந்திர கிரகங்கள் ராகு அல்லது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.