சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
சதயம் நட்சத்திரத்தின் இராசி : கும்பம்
சதயம் நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
சதயம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி
சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : யமன்
சதயம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை
சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : ராட்சஸ கணம்
சதயம் நட்சத்திரத்தின் விருட்சம் : கடம்பு (பாலில்லா மரம்)
சதயம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் குதிரை
சதயம் நட்சத்திரத்தின் பட்சி : அண்டங்காக்கா
சதயம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
சதயம் நட்சத்திரத்தின் வடிவம்
சதயம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 24வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘செக்கு’ என்ற பெயரும் உண்டு. சதயம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் ‘பூங்கொத்து’ வடிவத்தில் காணப்படும்.
சதயம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்மசிந்தை உடையவராகவும், செல்வவளமும், தாராள மனமும், தனிப்பட்ட கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராக விளங்குவார்கள். புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் மிக எளிதாக கோபம் கொள்ளும் குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு சமுகத்தில் நல்ல அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கும். இவர்கள் எதையும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள்.
ஆன்மிகத்தில் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். பரந்த சிந்தனையுடன் திட்டமிடுபவர்கள். எதாவது புதிதாக கற்று கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். உண்மை, சத்தியம் தவறாதவர்கள். உண்மையை நிலைநாட்ட என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள். இந்த விடாப்பிடி லட்சியத்தால் மற்றவர்களோடு கருத்து மோதல்களையும் சமாளிக்க வேண்டி இருக்கும். எடுக்கும் காரியத்தில் வல்லவர்கள். ஒரு விஷயத்தை பற்றி நன்கு சிந்தித்து பின்பு அதற்கேற்றவாறு செயல்படுவார்கள். இவர்கள் தங்கள் பகைவர்களை அடக்கி ஒடுக்கி வெற்றி காண்பார்கள். இவர்களை பலரும், மதித்து மரியாதை காட்டுவார்கள்.
இவர்களின் முற்பகுதி வாழ்க்கை பெரும்பாலும் சோதனை களமாக அமைகிறது. வாலிபம் கடந்த பிறகுதான் வாழ்க்கை சிறக்கிறது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை. எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள். இவர்களில் சிலர் திருமணம் ஆகாமலேயே இருப்பார்கள். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணை நற்குணங்கள் அமையப் பெற்றிருப்பார்கள். தற்பெருமை புகழ்ச்சி என்பது இவர்களுக்கு பிடிக்காது. இவர்களிடம் ஆயிரம் திறமைகள் இருந்தாலும், அதை வெளிபடுத்தத் தெரியாது. இவர்களின் 22 வது வயதில்தான், நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்
இவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் வசீகரமான உடலமைப்பை கொண்டவர்கள். திட்டமிட்டு காய் நகர்த்துவதில் வல்லவர்கள். உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்கள். அனைவரிடமும் உண்மையாக பழகுவார்கள். தெளிவாக பேசுவார்கள், கேளிக்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். பகைவர்களை அடித்து விரட்டுவார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவை எடுப்பார்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவம் இருந்தாலும் சமயம் பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
சதயம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் சதயம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் சுத்தமான நன்னடத்தை உடையவர்கள். நல்ல திடமான மனதை உடையவர்கள். தான் விரும்பியதை செய்யகூடியவர்கள்.
சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் சதயம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். பழிவாங்கும் குணம் அதிகம் கொண்டவர்கள். இறை நம்பிக்கை உடையவர்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர்கள்.
சதயம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் சதயம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். காரிய சித்தி உள்ளவர்கள். பசியை தாங்க கூடிய சக்தி இவர்களுக்கு கிடையாது. எதையும் விரும்பாதவர்கள். சேவை மனப்பான்மை உடையவர்கள். சிறந்த கல்வியறிவு கொண்டவர்கள். செய்யும் காரியங்களை நன்கு திட்டமிட்டு செய்வார்கள். எல்லாவிதமான நற்குணங்களையும் கொண்டு இருப்பார்கள். பிறருக்கு சேவை செய்யும் மனது அதிகம் இருக்கும்.
சதயம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் சதயம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். தாங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடியவர்கள். பல நல்ல குணங்களை கொண்டு இருப்பார்கள்.. கீர்த்தி உடையவர்கள். எதிலும் அவசரபடாமல் பொறுமையாக செயல்பட கூடியவர்கள். சகல சௌபாக்கியமும் நிறைந்தவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.