ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள்

யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன் மற்றும் தீய பலன் இரண்டையும் கொடுக்கலாம். இந்த கிரக இணைப்பின் காரணமாக பலவிதமான யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும். நாம் இந்த பகுதியில் சில யோகங்களையும் அதனால் உண்டாகும் பலன்களையும் விரிவாக பார்ப்போம்.

யோகங்களின் வகைகள்

வாகன லாப யோகம் (Vaagana Labha Yogam)

4க்கு உரியவன் சுப கிரகத்துடன் கூடி 9 ல் இருப்பினும், 9 க்கு உரியவனுடன் இணைந்திருந்தால் வாகன லாப யோகம் உண்டாகிறது.

வாகன லாப யோகத்தின் பலன்கள்

வீடு மற்றும் மனைகள் மூலம் வருமானம் ஏற்படும். வாகன வசதிகள் உண்டாகும்.

ஸ்வீகார புத்திர யோகம் (Suveegara Puthira Yogam)

மிதுனம் அல்லது கன்னி லக்னமாகிய ஐந்தில் செவ்வாய், சனி இருந்து புதன் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் ஸ்வீகார புத்திர யோகம் உண்டாகும்.

ஸ்வீகார புத்திர யோகத்தின் பலன்கள்

தனக்கு பிள்ளைகள் பிரப்பதில்லை. ஸ்வீகார புத்திர ப்ராப்தி உண்டாகும்.

சூரனாகும் யோகம் (Suranaagum Yogam)

இரவில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாய் லக்னதிலோ அல்லது 1௦ல் அமைந்திருந்தால் சூரனாகும் யோகம் உண்டாகிறது.

சூரனாகும் யோகத்தின் பலன்கள்

சிறந்த வீரராக விளங்குவார்கள். வீர தீர பராகிரமசாலியாக திகழ்கிறார்கள்.

வீரிய குறைவு யோகம் (Veeriya Kuraivu Yogam)

லக்னம் ஒற்றைப்படை ராசியாக இருந்து அதில் சுக்ரன் இருந்தால் வீரிய குறைவு யோகம் உண்டாகிறது.

வீரிய குறைவு யோகத்தின் பலன்கள்

குழந்தை பிறக்கும் தகுதி குறைவாக இருக்கும். மேலும் காலதாமதமான குழந்தை பிறப்பு பாக்கியம் ஏற்படும்.

சோம்பல் உண்டாகும் யோகம் (Sombal Undagum Yogam)

லக்னாதிபதியுடன் சனி இணைந்து இருக்க உண்டாவது சோம்பல் உண்டாகும் யோகம் ஆகும்.

சோம்பல் உண்டாகும் யோகத்தின் பலன்கள்

இவர்கள் உடலில் சோம்பல் அதிகம் இருக்கும். எதிலும் மந்தத்துடன் செயல்படுவார்கள்.

சர்ப்ப கண்ட யோகம் (Sarpa Kanda Yogam)

2ம் வீட்டில் ராகு மாந்தியுடன் இணைந்து இருந்தால் சர்ப்ப கண்ட யோகம் ஏற்படுகிறது.

சர்ப்ப கண்ட யோகத்தின் பலன்கள்

சர்ப்பம் அதாவது பாம்பு கடியால் மரணம் ஏற்படும்.

சகோதர லாப யோகம் (Sagothara Labha Yogam)

3ம் இடம் வலுவாக இருந்து வலுத்து மூன்றுக்கு உரியவன் பலம் பெற்று 3ல் சுப கிரகங்கள் அமையப் பெற்றால் சகோதர லாப யோகம் உண்டாகிறது.

சகோதர லாப யோகத்தின் பலன்கள்

சகோதரர்களுடன் சுமூகமான உறவு இருக்கும். சகோதர்கள் மூலம் உரிய உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.

மஹா பாக்கிய யோகம் (Maha Pakkiya Yogam)

ஆணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் ஆண் ராசியிலும், பெண்ணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் பெண் ராசியிலும் இருந்தால் மஹா பாக்கிய யோகம் உண்டாகிறது.

மஹா பாக்கிய யோகத்தின் பலன்கள்

இவர்கள் சிறந்த நிர்வாகிக்கும் திறமை கொண்டவர்கள். ஒரு நாட்டையோ அல்லது ஒரு பகுதியையோ அல்லது ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகத்தையோ நடத்தும் யோகம் ஏற்படும்.

சன்யாச யோகம் (Sanyaasa Yogam)

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் சன்யாச யோகம் உண்டாகிறது.

சன்யாச யோகத்தால் உண்டாகும் பலன்

இவர்கள் ஒரு மதத்தின் தலைவராகவோ அல்லது ஆன்மீக தலைவராகவோ இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் புகழ்பெற்ற ஆன்மீக தலைவர்களான புத்தர், சங்கராச்சாரியார் சுவாமிகள், ராமானுஜர் ஜாதகத்தில் இந்த யோகம் அமைந்திருப்பதை அறியலாம்.

தீர்க்க தேக யோகம் (Theertha Thega Yogam)

புதனுக்கு 7ல் செவ்வாய் இருந்தால் உண்டாவது தீர்க்க தேக யோகம் உண்டாகிறது.

தீர்க்க தேக யோகத்தின் பலன்கள்

இவர்கள் நல்ல திடமான உடல் கட்டு உடையவர்களாக இருப்பார்கள்.

ஜோதிடத்தில் யோகங்கள்

திரவிய நாச யோகம் (Thiraviya Naasa Yogam)

9ல் ராகு அமைந்திருந்தால் திரவிய நாச யோகம் உண்டாகிறது.

திரவிய நாச யோகத்தின் பலன்கள்

பெண்ணால் பொருள் நஷ்டம் உண்டாகிறது. மேலும் பெண்களால் அவப்பெயர்கள் ஏற்படும்.

மாதுரு சாப புத்ர யோகம் (Maathuru Sabha Puthra Yogam)

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5ல் பாவ கிரகங்கள் இருக்க சந்திரன் பாவ கிரகங்கள் நடுவிலோ அல்லது நீசம் பெற்று இருந்தால் உண்டாவது மாதுரு சாப புத்ர தோஷம் ஆகும்.

மாதுரு சாப புத்ர தோஷத்தின் பலன்கள்

மாதுரு சாப புத்ர தோஷத்தால் புத்திர தோஷம் உண்டாகிறது. இதனால் காலதாமதமான குழந்தை பாக்கியம் ஏற்படும்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...
தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
கனவுகளின் அர்த்தங்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் கனவுகள் வருகின்றன. சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கலாம். அவற்றுக்கு...
சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...
அட்சதை போடுவது எதற்காக

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்? திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.