உங்களை பற்றிய கனவு பலன்கள்
கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் கனவுகள் வருகின்றன. சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கலாம். அவற்றுக்கு ஏறக்குறைய ஒரே மாதிரி அர்த்தம் இருக்கலாம். பல கனவுகளுக்கு நம் வீட்டு பெரியவர்கள் விளக்கம் கூறுவார்கள். ஆனால் ஒரு சில கனவுகளுக்கு அவர்களுக்கும் அர்த்தம் தெரியாது. அவற்றில் சில நம்மை பற்றி நாமே காணும் கனவுகள், அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்,
1. உங்களுடைய கனவில் உங்களையே நீங்கள் கண்ணாடியில் பார்த்தால், வெகு விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறப் போகின்றது என்று அர்த்தம்.
2. யாரோ ஒருவர் உங்களை அழகுபடுத்துவது போல கனவு கண்டால் நெருங்கிய நண்பர் நம்பிக்கை துரோகம் செய்ய போகிறார் என்று பொருள்.
3. உங்களை யாராவது அவமானப்படுத்துவது போல கனவு கண்டால் சிறு சிறு பிரச்சனைகளும், துன்பமும் வரபோகிறது என்று பொருள்.
4. உங்களுக்கு மற்றவர்கள் ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால், உங்களை தவறான வழியில் திசை திருப்புகிறார்கள் என்று பொருள்.
5. உங்கள் உடம்பில் இருந்து இரத்தம் வருவது போன்று கனவு வந்தால் உங்களின் திறமை அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு பேரும், புகழும், கிடைப்பதற்கான அறிகுறி வரபோகிறது என்று அர்த்தம்.
6. நீங்கள் முன்பின் தெரியாதவரிடம் பேசுவது போல் கனவு கண்டால் மற்றவர்களால் உயர்ந்த நிலையை அடைய போகிறீர்கள் என்று பொருள்.
7. உங்கள் கனவில் அழகான பெண் வந்தால் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.
8. உங்களின் ஆசிரியர் கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் வளங்கள் அமோகமாகப் மேன்மேலும் பெருக போவதன் அறிகுறியாகும்.
9. நீங்கள் உங்கள் ஆசிரியரை காண்பது போலவும், பேசுவது போலவும் கனவு கண்டால் உங்கள் வாழ்வில் நன்மை ஏற்பட போகிறது என்று பொருள்.
10. உங்களுக்கு நோய் பிடித்தது போல கனவு வந்தால், உங்களின் நண்பர் ஏமாற்ற போகிறார் என்று அர்த்தம்.
11. குழந்தை சிரித்து கொண்டே இருப்பது போல கனவு கண்டால் உங்களின் பணவரவு உயர போகிறது என்று அர்த்தம்.
12. உடன் பிறந்த சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி சரியாக போகிறது என்று அர்த்தம்.
13. உடன் பிறந்த சகோதரி உங்கள் கனவில் வந்தால் உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று அர்த்தம்.
14. உங்கள் தந்தையை நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் சிறிது சிறிதாக சரியாகும் என்று அர்த்தம்.
15. நீங்கள் உங்களை அழகுபடுத்திகொள்வது போலக் கனவு கண்டால் செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
16. நீங்கள் மட்டும் உணவருந்துவது போல் கனவு கண்டால் உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட போகிறது என்று பொருள்.
17. நீங்கள் யாருக்காவது அறிவுரை கூறுவது போல் கனவு வந்தால் உங்கள் நண்பர்களிம் மனக்கசப்பு தோன்றும் என்று அர்த்தம்.
18. நீங்கள் யாரையாவது அவமரியாதை செய்வது போல கனவு கண்டால் பல நாட்களாக தடைபட்ட காரியங்கள் கைகூடி வரும்.
19. நீங்கள் யாரிடமாவது கோபம் கொள்வது போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் தோல்வி அடையப்போகிறது என்று பொருள்.
20. நீங்கள் மலத்தை மிதிப்பது போல் கனவு கண்டால் சுபச்செலவுகள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
21. ஒரு அழகான பெண் உங்களை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
22. உங்களின் மாமியார் கனவில் வந்தால் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் எல்லா காரியங்களிலும் செயல்பட வேண்டும் என்று அர்த்தம்.
23. உங்களின் மாமனார் கனவில் வந்தால் உங்களை உற்சாகப்படுத்த ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
24. நீங்கள் உங்கள் காதலனிடமோ அல்லது காதலியிடமோ காதலை சொல்வது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் வேலைகள் வெற்றிகரமாக நிறைவடைய போகிறது என்று பொருள்.
25. நீங்கள் உங்களின் முன்னாள் மனைவி அல்லது முன்னாள் காதலியுடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால், அந்த உறவு விரைவில் முடிவடைய போகிறது என்று அர்த்தம்.
26. பெண் கர்ப்பம் ஆவது போல் கனவு கண்டால் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
27. முன்பின் தெரியாதவர்களிடம் உடல்உறவு கொள்வது போல் கனவு வந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உயர்வடைய போகிறீர்கள் என்று பொருள்.
28. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு கண்டால் உங்களின் நட்புக்கு ஆபத்து வரபோகிறது என்று பொருள்.
29. நீங்கள் யாருக்காவது முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் ஒரு பிரச்சனை வரப்போகின்றது என்று அர்த்தம்.
30. உங்களுக்கு அடிக்கடி பாலியல் சம்பந்தமான கனவுகள் வந்தால் நீங்கள் ஆசைப்பட்டது எதுவுமே கிடைக்காது என்று அர்த்தம்.