சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

மீன் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள்

 1. மீன் – ½  கிலோ
 2. புளி – எலுமிச்சை அளவு
 3. பூண்டு – 10 பல்
 4. சின்ன வெங்காயம் – 10
 5. தக்காளி – 1
 6. மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
 7. மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
 8. மல்லித்தூள் – 2 ஸ்பூன்
 9. உப்பு – தேவையான அளவு
 10. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

அரைக்க

 1. தேங்காய் துருவல் – ¼  கப்
 2. மிளகு – 1 ஸ்பூன்
 3. சீரகம் – 1 ஸ்பூன்
 4. கருவேப்பிலை – 2 கொத்து

தாளிக்க

 1. சீரகம் – ½  தேக்கரண்டி
 2. கடுகு – ½ ஸ்பூன்
 3. மிளகு – ½  தேக்கரண்டி
 4. வெந்தயம் – 1 ஸ்பூன்
 5. கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
 6. நல்லெண்ணெய் –  தேவையான அளவு

செய்முறை

 1. புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
 2. தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 3. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
 4. மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 5. கடாயில் என்னை ஊற்றி கடுகு,சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 6. பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
 7. பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 8. நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
 9. வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
 10. கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பின் பரிமாறினால் சுவையான மீன் குழம்பு தயார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
பல்வேறு திருமண சடங்குகள்

பல்வேறு விதமான திருமண சடங்குகள்

திருமண சடங்குகள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு...
நட்சத்திர கணங்கள்

நட்சத்திர கணங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்

நட்சத்திர கணங்கள் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான கணங்கள் பற்றிய சில பொதுவான விஷயங்கள் குறித்து இப்பகுதியில் சற்று விரிவாக பார்ப்போம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.