விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விருச்சிக லக்னத்தின் அதிபதி செவ்வாய் பகவனாவார். விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன் கோபம் அதிகம் கொண்டவர்கள் இவர்கள். அவசரகுணம் அதிகம் கொண்டவர்கள். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற இருப்பார்கள். பொறுமை என்பது இவர்களுக்கு இருக்காது. இவர்களில் பெரும்பாலானோருக்கு தந்தையின் ஆதரவு கிடைப்பதில்லை.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

யாரையும் ஏமாற்றாமல் தனது சுய சம்பாத்தியத்தில் விருப்பம் உள்ளவர்கள். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். யாருக்காவது காரியம் ஆகவேண்டும் என்றால் இவர்களை புகழ்ந்தால் போதும், காரியம் தன்னால் முடியும். தனக்கு எல்லாம் தெரியும் என்பது .போல பேசுவார்கள். எதையும் எடுத்த எடுப்பில் முடிக்க நினைப்பார்கள். விருச்சிக லக்னத்துக்கு சந்திரன் 5,9 ஆம் இடங்களில் இருந்தால் நல்ல வசதி வாய்ப்புகளும், செல்வமும், செல்வாக்கும், நிறைய சொத்துக்களும் இவர்களுக்கு அமையும். இவர்களது வாழ்கையில் சுலபமான விஷயங்கள் கூட மிகுந்த போராட்டத்திற்கு பிறகே நடக்கும்.

இவர்களை அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. அப்படியே யாரவது ஏமாற்றினாலும் அவர்களை தகுந்த நேரம் பார்த்து பழிவாங்குவார்கள். பிறரை கேலியும் கிண்டலும் செய்வதில் வல்லவர்கள். தன்னுடைய கருத்தை எல்லோரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்களின் கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். வாழ்வில் வெற்றி பெறுவதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள். இவர்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், தீர்க்கமான கண்களும் இருக்கும்.

இவர்களுக்கு பணவரவு எந்த வகையிலாவது இருந்து கொண்டே இருக்கும். இவர்களின் சொல்லுக்கு செல்வாக்கு அதிகம். எதிரிகள் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். பிறரை அதிகாரம் செய்யும் வேலையே இவர்களுக்கு பிடித்ததாகும். வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் இவர்கள் நன்றாக இருப்பார்கள். இவர்கள் யாருடனும் நெருக்கமாக பழக மாட்டார்கள். சந்தேக புத்தி கொண்டவர்கள். எதாவது ஒரு இலட்சியத்தை நிர்ணயித்து அதை அடைய கடுமையாக உழைப்பார்கள்.

இவர்கள் சற்று முர்க்கத்தனம் மிகுந்தவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். சோம்பேறித்தனமாக இருப்பது என்பது இவர்களுக்கு பிடிக்காது. இவர்களுக்கு சில சமயங்களில் இனம் புரியாத மனக் கவலைகளும் பதட்டமும் வந்து போகும். இவர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு, அறிவாற்றல், முயற்சிகளில், முன்னேற்றம் அடைவார்கள். இவர்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்கள். கலகம் உண்டு பண்ணும் மனப்பான்மை இவர்களுக்கு இருக்கும். கொண்ட குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். சகோதரர்களிடமிருந்து விலகி வாழ்வார்கள்.

இவர்களின் வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்கக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பெரியவர்களிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள். விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும். பொருளாதாரத்தில் நல்ல நிலை திருமணத்திற்குப் பிறகு தான் ஏற்படும். திருமண தடை நீங்க சிவபெருமானையும், பெருமாளையும் வணங்கி வந்தால் நன்மை வந்து சேரும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
கனப்பொருத்தம் என்றால் என்ன

கணப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

கணப் பொருத்தம் என்றால் என்ன? உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் வைத்தான் இறைவன். மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான குணங்கள் இருப்பதில்லை. அந்த குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த...
ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக...

தித்திக்கும் கோவில் சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் பாகு வெல்லம் – 1 கப் பாசி பருப்பு – ¼ கப் நெய் – 100 கிராம் ஏலக்காய் – சிறிதளவு ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.