கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam)
ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று பெயர். அதாவது 7 கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் வரிசையாக இருக்க வேண்டும்.
இந்த கிரக மாலிகா யோகம் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 7 கிரகங்களும் எந்தெந்த இடங்களில் இருந்தால் எந்த மாதிரியான கிரக மாலிக யோகம் ஏற்படும் என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.
லக்ன மாலிகா யோகம்
7 கிரகங்களும் லக்கினத்திலிருந்து ஆரம்பித்து வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் லக்ன மாலிகா யோகமெனப் பெயர். இவ்வாறு அமைய பெற்றவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த பதவி வகிப்பர். பண வசதி நன்றாக இருக்கும். இவர்களுக்கு அரசாளும் யோகம் அமைகிறது.
தன மாலிகா யோகம்
அதே போல 2-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்குத் தன மாலிகா யோகம் என்று பெயர். இந்த யோகமிருந்தால் பண வசதி நன்றாக இருக்கும். இவர்கள் லட்சாதிபதி ஆவார்கள்.
விக்கிரம மாலிகா
3-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு விக்கிரம் மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் மிகுந்த தைரியசாலியாக இருப்பார்கள். மேலும் தலைமை தாங்கும் குணம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். இவர்கள் தான தர்மம் அதிகம் செய்வார்கள்.
சுக மாலிகா யோகம்
4-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு சுக மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் தர்ம சிந்தனை உள்ளவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் பல வித சுகங்களை அனுபவிப்பார்கள். மேலும் தான, தர்மம் செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
புத்திர மாலிகா யோகம்
5-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக இருந்தால் அதற்கு புத்திர மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் புகழ் வாய்ந்தவராகவும் இருப்பார்கள்.
சத்ரு மாலிகா யோகம்
6-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக இருந்தால் அதற்கு சத்ரு மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் மிகுந்த பேராசை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் பணம் சம்பாதிக்க மிகுந்த கஷ்டப்படுவார்கள்.
களத்திர மாலிகா யோகம்
7-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக அமைய பெற்றிருந்தால் அதற்கு களத்திர மாலிகா யோகம் என்று. இவர்களுக்கு பெண்கள் மேல் அதிக மோகம் இருக்கும். மேலும் பதவி மேலும் மோகமிருக்கும். பெண்களை வைத்து தொழில் நடத்தி லாபம் பெறுவார்கள்.
அஷ்டமா மாலிகா யோகம்
8-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு அஷ்டமா மாலிகா யோகம் என்று பெயர். அதன்படி இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மிகவும் ஏழ்மையானவராக இருப்பார். மனைவிக்குக் கீழ்ப்படிந்தவராகவும் இருப்பார்.
பாக்கிய மாலிகா யோகம்
9-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு பாக்கிய மாலிகா யோகம் என்று பெயர். இவர்களுக்கு மிகவும் வசதியான வாழ்க்கை கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகம் இருக்கும்.
கர்ம மாலிகா யோகம்
10-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு கர்ம மாலிகா யோகம் என்று பெயர். இவர்களுக்கு நல்ல மதிப்பான வாழ்க்கை அமையும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
லாப் மாலிகா யோகம்
11-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக அமைந்திருந்தால் அதற்கு லாப் மாலிகா யோகம் என்று பெயர். இவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்ல திறமைசாலிகள்.
விரய மாலிகா யோகம்
12-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகமும் வரிசையாக இருந்தால் விரய மாலிகா யோகம் என்று பெயர். வாங்கும் பொருள்களை லாபமான விலைக்கு வாங்குவர். நல்ல விதத்தில் பணத்தை முதலீடு செய்வர். இவர்கள் அனைவராலும் போற்றபடுவார்கள்.
இந்த கிரக மாலிகா யோகம் லக்கினத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டுமென்றும், ஆரம்பித்து முதல் 5-லிருந்து 9-வீட்டுக்குள் முடிய வேண்டும் என்ற கருத்தும் உண்டு. முதல் 5-வீட்டிற்குள் முடிந்தால் ஒரு வீட்டிற்கு ஒரு கிரகம் என்ற நிலைமை மாறி சில வீடுகளில் 2 கிரகங்கள் கூட இருக்கும்