செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது? செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கபடும் ஒன்று செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு திருமணம் தாமதமாக நடைபெறும், அல்லது திருமணம் நடைபெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும். ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.

செவ்வாய் தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் எவ்வாறு ஏற்படுகிறது?

முற்பிறவியில் செய்த பாவங்கள் மற்றும் வாழ்க்கை துணையை கொடுமை படுத்துபவர்களுக்கு செவ்வாய் தோஷம் ஏற்படும் என கூறப்படுகிறது.

செவ்வாய் தோஷத்தால் உண்டாகும் பிரச்சனைகள்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லாத மணவாழ்க்கை, சந்தேக குணம், பிரிவு, குழந்தையின்மை, மாங்கல்ய பலமில்லாமல் இருப்பது, சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை குறைவு, பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறி, ஆயுள் பலமின்மை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் என்பது ஜோதிட நம்பிக்கை ஆகும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் திருமணம்

செவ்வாய் இரத்ததுக்கு அதிபதியாவார். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்று அதிக உணர்ச்சி இருக்கும். அந்த உணர்ச்சியானது சிலருக்கு கோபமாகவும், சிலருக்கு வேகமாகவும், ஒரு சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக விருப்பம் இருக்கும். ஆனால் செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் ஆர்வம் குறையும்.

தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அதே போல செவ்வாய் தோஷம் கொண்ட ஜாதகம் கொண்ட ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்கின்றனர் பெரியோர்கள்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம்

செவ்வாய் உள்ளவர்கள் ஆணோ, பெண்ணோ இருவரும் அதே போன்ற செவ்வாய் தோஷம் உள்ள வரனையே மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து இன்னொருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றால் வாழ்க்கை துணையை பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்படும் அல்லது துணையின் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

செவ்வாய் தோஷத்திற்கான விதிவிலக்குகள்

1. மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
2. குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷமில்லை.
3. சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
4. 2 ஆம் இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் செவ்வாய் தோஷமில்லை.
5. 4 ஆம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.
6. 7 ஆம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.
7. 8 ஆம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை.

மேலும் விரிவான செவ்வாய் தோஷ விதிவிலக்குகளை இங்கே கிளிக் செய்வதன் மூலம் அறியலாம்.

செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் முறையான பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் செவ்வாய் தோஷத்தின் கடுமையை குறைக்கலாம்.

செவ்வாய் தோஷம்

1. செவ்வாய் கிழமைகளில் முருகன் மற்றும் முருகனின் அம்சம் கொண்ட அங்காரகனையும் சன்னதியில் வழிபட்டு வந்தால் செவ்வாயின் தோஷத்தின் தாக்கம் குறையும்.

2. முருகனுக்கு சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் செவ்வாய் தோஷம் விரைவில் விலகும்.

3.. செவ்வாய் கிழமை வரும் சதுர்த்தி நாளில் கணபதிக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்து வந்தால் நல்லது நடக்கும். இவ்வாறு 41 செவ்வாய்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்.

4. செவ்வாய்க்கிழமை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் துவரை தானம் செய்து வந்தால் செவ்வாயின் தோஷத்தின் கடுமை குறையும்.

5. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் காயத்ரீ மந்திரம், தியான மந்திரம், சூரிய கவசம் போன்றவற்றை துதித்து கடவுளை மனமுருகி வழிபட்டு சொல்லி வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

6. செவ்வாய் தோஷக்காரர்கள் சிவப்பு கல் பதித்த தங்க மோதிரத்தை மோதிர விரலில் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் செவ்வாயின் கடுமை குறையும்.

7. நவகிரகங்கள் உள்ள ஆலயங்களில் செவ்வாய் கிரகத்துக்கு 27 செவ்வாய் கிழமைகள் நெய் விளக்கு போட்டு வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

நவகிரக செவ்வாய்க்கு பிறந்ததேதி அல்லது கிழமைகளில் அர்ச்சனைச் செய்வதால் நன்மை உண்டாகும். இதுபோன்ற பரிகாரங்கள் செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள்

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சீர்காழியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு வாய்ந்த பரிகார தலமாக விளங்குகிறது.

நவகிரக தோஷம் விலக

மேலும்

1. சுப்ரமணியசுவாமி, சென்னிமலை, ஈரோடு.
2. சங்கமேஸ்வரர், பவானி, ஈரோடு.
3. கந்தசுவாமி, திருப்போரூர், காஞ்சிபுரம்.
4. மலையாள தேவி துர்காபகவதி அம்மன், நவகரை, கோயம்புத்தூர்.
5. அமிர்தகடேஸ்வரர், மேலக்கடம்பூர், கடலூர்.
6. அருணஜடேசுவரர், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.
7. கைலாசநாதர், கோடகநல்லூர், திருநெல்வேலி.
8. வீரபத்திரர், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்.
9. கல்யாண கந்தசுவாமி, மடிப்பாக்கம், சென்னை.
10. அகஸ்தீஸ்வரர், வில்லிவாக்கம், சென்னை.
11. தேனுபுரீஸ்வரர், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்.
12. அகோர வீரபத்திரர், வீராவாடி, திருவாரூர்.
13. பிரளயநாதசுவாமி, சோழவந்தான், மதுரை.
14. விருத்தபுரீஸ்வரர், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
15. சுப்பிரமணியர் காங்கேயன், காங்கேயநல்லூர், வேலூர்.
16. ஏழுமலையான், திருப்பதி, ஆந்திரா

போன்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டு செவ்வாய் தோஷம் விலகி வளமோடு வாழலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு உத்திராடம் நட்சத்திரத்தின் 2,...
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
இஞ்சி துவையல் செய்வது எப்படி

இஞ்சி துவையல் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இஞ்சி துவையல் இஞ்சி துவையல் ஜீரண சக்தியை தூண்டுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.