திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது

பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு செய்யபடுகிறது என்று தெரிவதில்லை. திருமணத்தில் அய்யர் சொல்வதை அப்படியே செய்து விட்டு வந்துவிடுகிறோம். அப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களில் ஒன்றுதான் அருந்ததி பார்ப்பது. இந்த சடங்கு ஒரு சில குடும்பங்களில் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.  எதற்கு அய்யர் அருந்ததி பார்க்க சொல்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

அருந்ததி பார்த்தல்

ஒவ்வொரு திருமணத்திலும் திருமணம் முடித்த பிறகு மணமக்கள் இருவரையும் மண்டபத்திற்கு வெளியே கூட்டி வந்து வானில் கையை காட்டி அருந்ததி நட்சத்திரம் தெரிகிறதா என்று அய்யர் கேட்க, உடனே மணமக்களும் தெரிகிறது என்று கூறுவர். ஆனால் அருந்ததி நட்சத்திரம் அவ்வளவு எளிதாக தெரியாது. அருந்ததி நட்சித்திரத்தை ஏன் பார்க்க சொல்கிறார், நாம் ஏன் பார்க்கிறோம் என்பது யாருக்குமே தெரியவில்லை.

அருந்ததி தரிசனம்

சப்தரிஷிகளில் ஒருவர் வசிஷ்டர் ஆவார். இவரின் மனைவியே அருந்ததி ஆவார். வானில் உள்ள பல்லாயிரக்கணக்கான நட்சத்திர மண்டலங்களில் சப்தரிஷி மண்டலமும் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகள் வானில் நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். இந்த நட்சத்திர தொகுப்பில் வசிஷ்ட நட்சத்திரத்துடன் எப்போதும் இணைந்தது போல இருக்கும் நட்சத்திரமே அருந்ததி நட்சத்திரமாகும். வாழ்க்கையில் சுக, துக்கம் என எந்த நிலையிலும் மணமக்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் அருந்ததி நட்சத்திரம் போல இணைந்தே இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்கே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

இதில் வசிஷ்டர் நட்சத்திரம் இயல்பாக வானில் தெரியும். ஆனால் அருந்ததி நட்சத்திரமோ அவ்வளவு எளிதாக தெரியாது, உற்று பார்த்தால் மட்டுமே சற்று மறைந்தார் போல தெரியும். எனவே குடும்பத்தை காக்கும் பெண்ணானவள் தன்னை மறைத்துக் கொண்டு தனது கணவணின் குடும்பத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்போது அவளது குடும்பமும், அப்பெண்ணும் சமுதாயத்தால் பாராட்டபடுவார்கள்.

இதுவே அருந்ததி பார்த்தல் சடங்கின் முக்கிய மையக்கருத்தாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசி பொது பலன்கள் – விருச்சிக ராசி குணங்கள்

விருச்சிக ராசி குணங்கள் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. இவர்களுக்கு எத்தனை...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #8

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.