திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி

திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில பட்ச திருதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் திரிதியை கிருஷ்ண பட்ச திரிதியை என்றும் அழைக்கபடுகிறது.

திரிதியை திதி

திரிதியை திதியின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரும் திருதியை திதியானது, அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியைதான் நாம் ‘அட்சய திருதியை’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.
‘அட்சயம்’ என்றால் ‘தேயாதது’, ‘வளர்தல்’ என்று பொருள். அதனால்தான் எல்லா நலன்களையும் குறையில்லாமல் வாரி கொடுக்கும் இந்தத் திருதியை, ‘அட்சய திருதியை’ என்று பெயர் பெற்றது.

மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொண்டபோது அவர்கள் உணவுக்கு கஷ்டப்படாமல் இருக்க பகவான் கண்ணன் மூலம் சூரிய தேவனால் அட்சய பாத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த பாத்திரத்தில் இருந்து தேவையான உணவை, அள்ள அள்ள குறையாமல் அவர்கள் பெற்று உண்டு வந்தனர். இந்த அட்சய பாத்திரமானது, பாண்டவர்களுக்கு ஒரு அட்சய திருதியை நாளில் தான் கிடைத்தது.

திரிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

உடையவர்கள், எண்ணியதை முடிப்பவர்கள், கீர்த்தி உடையவர்கள், தனவான், பயந்த சுபாவம் உள்ளவர்கள், பராக்கிரமம் உடையவன், தூய்மையானவர்கள் திருக்கோவில் வேலைகளை விருப்பமுடன் செய்பவர்கள்.

திரிதியை திதியில் என்னென்ன செய்யலாம்

இந்த திருதியை திதியின் அதிதேவதை கெளரிமாதா எனப்படும் பராசக்தி ஆவார். இந்நாளில் சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும். மேலும் பிறந்த குழந்தைக்கு முதல் முதலாக உணவு ஊட்டி பழக்கலாம். சங்கீதம் மற்றும் இசை கற்றுக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அழகு சம்மந்தமான வேலைகளில் ஈடுபடலாம் அல்லது கற்றுக் கொள்ளலாம். மேலும் வீட்டில் அனைத்து வகையான சுப காரியங்களையும் செய்யலாம்.

திரிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

திரிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள் மகரம் மற்றும் சிம்மம் ஆகும்.

திரிதியை திதிக்கான தெய்வங்கள்

திரிதியை திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : சிவன், மற்றும் கௌரி

திரிதியை திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : குபேரன், மற்றும் சந்திரன்

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷங்களும், பரிகார முறைகளும்

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதத்தில்...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி...
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 3ம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) :...
சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...
காபி குடிப்பது நல்லதா

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.