எண் கணிதம் என்றால் என்ன? எண் கணிதத்தை பார்ப்பது எப்படி?

எண் கணிதம்

நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். ‘எண்களை’ கொண்டு உங்கள் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கணித சாஸ்திரம். இது ஆங்கிலத்தில் ‘Numerology’ என அழைக்கபடுகிறது.

எண் கணிதம் எப்படி பார்ப்பது

இந்த உலகில் நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் எண்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக,’ உங்களின் வயது என்ன? உயரம் என்ன? எவ்வளவு தூரம்?’ எவ்வளவு எடை? எவ்வளவு நீளம்? என இந்த அனைத்துக் கேள்விகளுமே எண்களை மையமாக வைத்து தான் அமைந்து உள்ளது. இந்த அடிப்படை தத்துவம் தான் Numerology.

நம்மை ஆட்டுவிக்கும் மூன்று எண்கள்

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் மூன்று எண்கள் மட்டும் தங்களுக்கு பிடித்த விதத்தில் ஆட்டி வைக்கின்றன. இந்த மூன்று எண்களில் உள்ள இரண்டு எண்களை நம்மால் மாற்றவே இயலாது. ஆனால், ஒரு எண்ணை மட்டும் நமக்கு பிடித்தார் போல மாற்றி அமைக்கக்கூடிய சுழலையும், வாய்ப்புகளையும் இறைவன் நமக்கு அளித்துள்ளார்.

இந்த உலகில் நம்மை ஆட்டுவிக்கும் அந்த மூன்று எண்கள்,

  1. பிறந்த தேதி எண்
  2. கூட்டு எண்
  3. பெயர் எண்

இந்த மூன்று எண்களில் பிறந்த தேதி எண் மற்றும் கூட்டு எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால், பெயர் எண்ணை இந்த இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும்படி அமைத்துக் கொள்ளலாம்.

எண்கணிதத்தை ஜாதகத்தின் அடிப்படையில் வைத்து கொள்வதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்கி கொள்ள முடியும்.

பிறந்த தேதி எண்

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது. பிறந்த தேதி எண் அடிப்படையில் ஒருவருடைய குணம், ஆசைகள் மற்றும் செயல்பாடுகளை அறியலாம்.

கூட்டு எண்

ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண்ணே கூட்டு எண் அல்லது உயிர் எண் என்று அழைக்கப்படுகின்றது. கூட்டு எண் மூலம் எதிர்காலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள இயலும்.

பெயர் எண்

ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண் அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு எண்களில் எந்த எண் பலம்பெற்று உள்ளதோ? அந்த எண்ணிற்கு நட்பின் அடிப்படையில் நாம் பெயரை வைத்துக் கொள்வதன் மூலம் நம்மால் அதிர்ஷ்டத்தை உருவாக்கி கொள்ள முடியும்.

ஆங்கில எழுத்துக்களும் அவற்றுக்கு உரிய எண்களும்

எண்களின் கிரக அதிபதி

A, J, I, Y, Q – 1 (சூரியனின் ஆதிக்கம் பெற்றது)

B, K, R – 2 (சந்திரன் ஆதிக்கம் பெற்றது)

C, G, L, S – 3 (குருவின் ஆதிக்கம் பெற்றது)

D, M, T – 4 (ராகுவின் ஆதிக்கம் பெற்றது)

E, H, N, X – 5 (புதனின் ஆதிக்கம் பெற்றது)

U, V, W – 6 (சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றது)

O, Z – 7 (கேதுவின் ஆதிக்கம் பெற்றது)

F, P – 8 (சனியின் ஆதிக்கம் பெற்றது)

உதாரணத்திற்கு 27 –1-1983 அன்று பிறந்த ஒருவருக்கு எண் கணிதத்தின்படி எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றி பார்ப்போம்,

இவரின் பிறந்த எண்ணை காண்பதற்குப் முதலில் பிறந்த தேதியின் எண்ணைக் கூட்ட வேண்டும்.

2 + 7 = 9

இவரின் பிறந்த எண் ஒன்பதாகும். ஆகவே, இவர் செவ்வாயின் ஆதிக்கத்தின் கீழ் பிறந்தவர். இவர் எவ்வளவு தூரம் முன்னேற முடியும் எனக் காண்பதற்கு இவரின் கூட்டு எண்ணைக் காண வேண்டும். அதன் அடிப்படையில்,

2+7+1+1+9+8+3 = 32 = 3 + 2 = 5

ஆகவே, இவரின் கூட்டு எண் 5. இது புதனைக் குறிக்கும் எண்ணாகும். ஆகவே இவருக்குப் பெயர் அமைக்கும் போது புதனின் ஆதிக்கத்தில் அமைப்பதே சிறப்பாகும் (அல்லது 5 இன் நட்பு எண்ணின் ஆதிக்கத்தில் அமைக்கலாம். 5 இன் மிக நெருங்கிய நட்பு எண் 6. இதே போல, எந்தெந்த எண்களுக்கு எந்தெந்த எண்கள் நட்பு மற்றும் பகை எண்கள் என்பதனை கீழே உள்ள அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்.

எண்கள் நட்பு எண்கள் பகை எண்கள்
1 1,2,3.9,5 6,8,4,7
2 1,2,9,3 4,7,8,6,5
3 1,2,3,9,8,4,7 5,6
4 8,6,5,3,4,7 1,2,9
5 1,5,6,8.4,7 2,9,3
6 5,8,6,4,7,9 3,1,2
7 8,6,5,3,4,7 1,2,9
8 5,6,4,7,3,8 1,2,9
9 1,2,3,6,9 7,4,8,5

ஆகவே, மேற்கண்ட இவருக்குப் பெயர் அமைக்கும் போது அந்த பெயரின் கூட்டுத் தொகை 14,15,23,24,41,42,46,50,51,59,60,69,77 ஆக அமைவது சிறப்பு.

மேலே குறிபிட்டுள்ள எண் கணித அடிப்படையில் அவர் பெயர் வைத்து கொண்டால் அவர் வாழ்வில் எல்லா நலன்களையும், வளங்களையும் பெறுவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மச்ச சாஸ்திர பலன்கள்

நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம் சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ,...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு...
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அவிட்டம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் மற்றும் கும்பம் அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாதம் இராசி அதிபதி (மகரம்) : சனி அவிட்டம்...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
குங்குமம் வைப்பதின் நன்மைகள்

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்? திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.