உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை டீ வகைகள்

ஆரோக்கியமான  மூலிகை டீ வகைகள்

தண்ணீருக்கு பிறகு நாம் அதிக அளவில் குடிக்க கூடிய பானம் என்ன என்றால் அது டீ தான். டீ குடிக்காமல் அன்றைய நாளே முழுமை பெறாது என்று நினைப்பவர்களும் உண்டு. காலையில் எழுந்த உடன் அனைவருக்கும் நினைவில் வருவது சுடச்சுட டீ குடிக்க வேண்டும் என்பது தான். டீ என்பது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய ஒரு அருமையான பானமாகும்.

மூலிகை டீ வகைகள் டீ குடிப்பது நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கலாம். தேநீரில் பல வகைகள் உள்ளன. பல்வேறு நிறத்தில் பல்வேறு சுவையுடன் டீ வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். பல்வேறு டீ வகைகளும் அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம்.

துளசி டீதுளசி இலை டீ

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம் பூ டீ ஆவாரம்பூ டீ

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப் பூ டீ செம்பருத்திப்பூ டீ

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ கொத்தமல்லி டீ

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா டீபுதினா இலை டீ

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ கொய்யா இலை டீ

கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கை இலை டீ முருங்கைக் கீரை டீ

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

ப்ளாக் டீ ப்ளாக் டீ

பால் சேர்க்காத இந்த ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்துவந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். உடலுக்கு தேவையான எனர்ஜியும் கிடைக்கும். ப்ளாக்டீ குடித்துவந்தால் இதய நோய் பக்கவாதத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்கிறது ஆய்வு ஒன்று.

கிரீன் டீ க்ரீன் டீ

எடை குறைப்புக்கு முதலில் பரிந்துரைக்கப்படுவது க்ரீன் டீ தான். க்ரீன் டீ காலையில் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையக்கூடும். தரமான க்ரீன் தேயிலை வாங்கி வெந்நீரில் கொதிக்கவிட்டு எலுமிச்சைசாறு பிழிந்து குடிக்கலாம். அதிக கசப்பு சுவையை உணர்ந்தால் சிறிது தேன் சேர்த்து குடிக்கலாம்.

எடை குறைப்பில் அதிக கலோரிகளை குறைக்க உதவுகிறது. சில புற்றூநோய்களின் அபாயத்தை இவை குறைக்க செய்யலாம். க்ரீன் டீ சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த மூலமாகும்.

தனியா டீ தனியா டீ

கொத்துமல்லி போன்றே தனியா விதைகளும் நன்மைகளை அளிப்பவை. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் அளவு தனியா விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.

தனியா விதைகள் இரத்த சோகையை தடுக்க செய்கிறது இது குடல் இயக்கத்தை மேம்படுத்த செய்கிறது. நீரீழிவு இருப்பவர்கள் தனியா விதைகளை கொண்ட தேநீர் குடிப்பதன் மூலம் இன்சுலின் சுரப்பு மேம்படுகிறது.

திரிபலா டீ திரிபலா டீ

ஒரு கப்சூடான நீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா சேர்த்து இறக்கி அவை நிறம் மாறும் வரை விட்டு இதில் எலுமிச்சை சாறு தேன் சேர்த்து குடிக்கலாம்.

திரிபலா உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றுகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. பல் ஈறு அழற்சி, ஈறு நோய்கள், சிறுநீர் நோய்த்தொற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.

லெமன் டீலெமன் டீ

சூடான நீரில் சிறிதளவு தேயிலையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த பின் இறக்கி வடிகட்டி பின் அதில் சிறிதளவு எலுமிச்சை சாரை பிழிந்து நன்கு கலந்து விடவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து பருகலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது மிகவும் நல்லது.

லெமன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். லெமன் டீயை தொடர்ந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

இஞ்சி டீஇஞ்சி டீ

முதலில் இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி  நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி, 3 அல்லது 4 மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின்னர் வடிகட்டி சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் சளி, மூக்கடைப்பு , போன்ற உபாதைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

ஏலக்காய் டீ

காய்ச்சிய பாலில் 2 அல்லது 3 ஏலக்காயை பொட்டு சிறதளவு டீ தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துஇறக்கி வடிகட்டி தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

ஏலக்காய் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கிறது. ஜீரண சக்த்தியை அதிகப்படுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பெண் கை மச்ச பலன்கள்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கை மச்ச பலன்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடத்தை வைத்து பலவகையான பலன்கள் சொல்லபட்டுள்ளது. மச்சம் தோன்றும் இடத்தை பொருத்து நல்ல பலன் மற்றும் தீய பலன் போன்றவை ஏற்படுகின்றன. அந்த...
பௌர்ணமி திதி

பௌர்ணமி திதி பலன்கள், பௌர்ணமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

பௌர்ணமி திதி பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும். பௌர்ணமி...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
திதி என்றால் என்ன

திதிகள் என்றால் என்ன? அவை யாவை?

பஞ்சாங்கமும், திதிகளும் நமது தினசரி வாழ்க்கையில், ஒரு நாளை துவங்கும் போதே அந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் எல்லா நாட்களும் அவ்வாறு இனிய நாளாக அமைவதில்லை. ஒவ்வொரு...
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அவிட்டம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் மற்றும் கும்பம் அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாதம் இராசி அதிபதி (மகரம்) : சனி அவிட்டம்...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.