லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

லிப்ஸ்டிக்

இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று பலரும் தினமும் உபயோகப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

லிப்ஸ்டிக் பாதிப்புகள் லிப்ஸ்டிக் போட்டால் தான் நாம் அழாகாக இருக்கிறோம், நம் உதடுகள் அழகாக இருக்கிறது என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் முற்றிலும் அது தவறு. அழகாக இருக்கும் அனைத்தும் ஆரோக்கியமானது அல்ல என்பதை பலரும் அறியவில்லை.

லிப்ஸ்டிக் நம் உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்துகிறது. லிப்ஸ்டிக் உபயோகப்படுத்துவதால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. ஏன் என்றால் லிப்ஸ்டிக்கில் பல நச்சுபொருட்கள், கெமிக்கல்கள்  சேர்க்கப்படுகின்றன.

நச்சுத்தன்மை நிறைந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதால் பாதிப்பு நம் உதடுகள் மட்டுமல்ல நம் உள்ளுறுப்புகளும் பாதிப்படைகின்றன. விஷம் என்று தெரியாமல் பல பேர் அதை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் உள்ளடங்கி இருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது நம் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும்.

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

  • லிப்ஸ்டிக்கை அடிக்கடி பயன்படுத்துவதால் இயற்கையாகவே உதட்டில் இருக்கும் பொலிவை இழந்து வறட்சி வெடிப்புகள் ஏற்படும்.
  • லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் தினமும் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள உறுப்புகள் பாதித்து கடுமையான நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.
  • லிப்ஸ்டிக்கை தினமும் பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
  • லிப்ஸ்டிக்கை அதிக அளவில் பயன்படுத்துவதால் புற்றுநோய் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.
  • லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு நரம்பு மண்டலம் மற்றும் மூளை நரம்புகள் பாதிப்படைகிறது.
  • லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது அவற்றில் சேர்க்கப்படும்  நச்சுப் பொருட்கள், நிறமிகளால் ஒவ்வாமை , அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படக் கூடும்.
  • லிப்ஸ்டிகை நீண்ட நாள் அதன் நிறம் மாறாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
  • தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் விளைவாக, சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

உதடுகளை எப்படி பராமரிப்பது ?

  • நம் உதடுகளை இயற்கையான முறையிலேயே அழகாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • உதட்டில் சிறிதளவு தேனை தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும்.
  • வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 20 நிமிடம் வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பதத்தை தந்து உதடுகள் வறட்சி அடையாமல் தடுத்து உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்கிறது

கருமையான உதடுகள்

  • கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் மாற்றும்.
  • தயிரை தினமும் உதடுகளில் தடவி வந்தால் அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
  • உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க தேங்காய் எண்ணெய்யை அல்லது பாதாம் எண்ணெய் உதடுகளில் தடவி வரலாம். இதனால் உதடுகள் மென்மையாகவும் , ஈரப்பதத்துடனும் இருக்கும்.
  • உதடுகளை சிவப்பாக வைத்துக் கொள்ள கெமிக்கல் நிறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து பீட்ரூட் சாறினை பயன்படுத்தலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...
அன்னாசி பழத்தின் பயன்கள்

அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் | அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழம் அன்னாசி பழம் பிரேசில் மற்றும் ஆகிய இடங்களைத் தாயகமாக கொண்டது. இதன் அறிவியல் பெயர் `அனாஸ் சாட்டிவிஸ் ஸ்கல்ட்’ (Annas sativis schult) என்பதாகும். இது பிரமிலசே இனத்தைச் சேர்ந்த ஒரு...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்  ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில்...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.