அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த உலகில் சகலத்தையும் படைத்து அதற்கான உணவையும் கொடுத்து காத்து ரட்சிக்கும் ஈசனுக்கு உணவையே அபிஷேகமாக அளித்துக் கொண்டாடப்படும் விழாவே அன்னாபிஷேக விழாவாகும்.

அன்னாபிஷேகம் செய்யும் முறை அன்னாபிஷேகத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனுடைய அற்புத ரூபத்தை தரிசிக்கின்ற நாள் எது என்றால் இந்த ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேக நாள் தான். உணவு என்பது இறைவனுக்கு சமமானது. எனவே உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அன்னாபிஷேக விழா கொண்டாடப்படுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி அன்று ஒவ்வொரு நடசத்திரத்திற்கு  உரிய பொருளால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷமானதாகும். ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று  அஸ்வினி நட்சத்திரம் இருப்பதால் அஸ்வினி நட்ச்சத்திரத்திற்கு உரிய அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கம் முழுமையாக அன்னத்தினால் மூடி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது அன்னத்தோடு காய்கறிகளையும் சேர்த்து சிவனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னத்தை ஒரு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவ பெருமான் அபிஷேக பிரியர் ஆவார். இவருக்கு ஐப்பசி பெளர்ணமி  தினத்தில் தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள் மற்றும் அன்னம் போன்ற பல பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து இறைவனின் அருளை பெறுகிறோம்.

இந்த அன்னாபிஷேகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட அன்னம் இரண்டு நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம் அப்படியே வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்திரம், சமகம் ஆகியவை பாராயணம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

அன்னாபிஷேக பலன்கள் 

‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கு அர்த்தம் சிவபெருமானை அன்னாபிஷேக அலங்காரத்தில் கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்துவதாகும்.

அன்னாபிஷேகம் செய்வது எப்படி அன்னாபிஷேகத்தை கண்டால் தீராத தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் பிரச்சனைகள் தீரும். லாபம் பெருகும். அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகத்தன்று அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானை அன்னதிருமேனியில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னாபிஷேகத்தில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அன்னபிஷேகத்திற்கு முந்தைய நாளே உங்களால் முடிந்த அளவு பச்சரிசியை வாங்கி கொடுக்கலாம். சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தில் நீங்கள் வாங்கி கொடுத்த அரிசியில் ஒரு பருக்கை இருந்தாலும் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் பரம்பரைக்கே கோடி புண்ணியமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய் தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச்...
ஆடியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம், மிதுனம் மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
தசமி திதி

தசமி திதி பலன்கள், தசமி திதியில் செய்ய வேண்டியவை

தசமி திதி தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும்...
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வருணன் பூராடம் நட்சத்திரத்தின் பரிகார...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.