உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க

கண் திருஷ்டி நீங்க
பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட… கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு…

1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக்கொண்டு தாய் மடியில் விழித்திருக்கும் குழந்தையை அமர வைத்து இடமிருந்து வலமாக மூன்று தடவையும் வலமிருந்து இடமாக மூன்று தடவையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்புக் கரைய  கரைய திருஷ்டியும் கரைந்து காணாமல் போய்விடும்.

2. குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும், அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம்.

3. திருஷ்டியின் தாக்கத்தால் குழந்தை கீழே விழுந்து அடிபட்டு விட்டால் உடனே கீழே கிடக்கும் செங்களல் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி தூக்கிப் போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம். இது கூட திருஷ்டி கழிக்கும் முறை தான்.

4. கொஞ்சம் பெரிதான குழந்தைக்கு, சோறு ஊட்டிய பின்னர் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றிப் போடலாம். சாப்பிடப் போகும் முன் ஒரு உருண்டை சாதத்தை தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே. இது நல்ல விளைவுகளைத் தரும்.

5. இன்னும் சில வீடுகளில் கடுகு, மிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்கார வைத்து,” ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும்!” என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள். இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரம் தான்.

கண் திருஷ்டி பரிகாரம்இப்படியாகக் குழந்தைகளுக்குப் பல வகையில் திருஷ்டி சுற்றிப் போடலாம்.

எனினும், சாஸ்திரங்களின் அடிப்படையில் தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழிப்பது என்பது மகா பாவம். அதை மட்டும் செய்யாதீர்கள். அப்படியாகச் செய்யும் பட்சத்தில், அது எதிர்மறை விளைவுகளைக் கூடத் தந்து விடலாம். தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றினால் ஆயுள் குறையும் என்று கூட சொல்லப்படுகிறது. அதாவது அது திருஷ்டி சுற்றும் நோக்கத்தையே பாதிப்படையச் செய்யும். அத்துடன் எதிர்மறை விளைவுகளையும் தர வல்லது. திருஷ்டி சுற்றுவது மட்டும் அல்ல, குளிக்க ஊற்றுவது, அலங்காரம் செய்து அழகு பார்ப்பது என எல்லாமே குழந்தை விழித்திருக்கும் நிலையில் தான் செய்தல் வேண்டும்.

குழந்தைக்கு கருப்பு திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். இது எல்லோராலும் செய்யக் கூடியதே.  அது அனுபவத்தில் அதிக அளவில் பயன் தரும் விஷயமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப் பொட்டு குழந்தையின் திருஷ்டியைப் போக்க வல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உடைந்த மண் பாண்டங்கள்

வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்? வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல...
சிக்கன் பிரைடு ரைஸ் செய்முறை

சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி

சிக்கன் பிரைடு ரைஸ் சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. இதற்கு உதாரணம் நம் ஊரில் தெருக்கு தெரு இருக்கும் துரித உணவு கடைகள் தான். அந்த வகையில்...

ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா செய்வது எப்படி

சிக்கன் சால்னா செய்வது எப்படி ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பின் வருமாறு காணலாம். வீட்டிலேயே எப்படி செய்வது தேவையான பொருட்கள் கோழிக்கறி - ½ கிலோ ...
இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
அஷ்டமி திதி பலன்கள்

அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை...
யோனி பொருத்தம் என்றால் என்ன

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.