சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி

சிக்கன் பிரைடு ரைஸ்

சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. இதற்கு உதாரணம் நம் ஊரில் தெருக்கு தெரு இருக்கும் துரித உணவு கடைகள் தான். அந்த வகையில் சைனீஸ் உணவில் ஒன்றான சிக்கன் பிரைடு ரைஸ் எவ்வாறு வீட்டிலேயே செய்வது என பார்ப்போம்.

சிக்கன் பிரைடு ரைஸ் செய்முறை

தேவையான பொருட்கள்

1. பாஸ்மதி அரிசி – 2 கப்
2. முட்டை – 1
3. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – 1/4 கிலோ
4. வெங்காயம் – 2
5. இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
6. சோயா சாஸ் – ½ மேஜைக்கரண்டி
7. வெங்காய தாள் – சிறிதளவு
8. முட்டை கோஸ் – சிறிதளவு
9. கேரட் – சிறிதளவு
10. பீன்ஸ் – சிறிதளவு
11. உப்பு – தேவையான அளவு
12. மிளகுத் தூள் – ½ மேஜைக்கரண்டி
13. கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1. காய்கறி வகைகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2. பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, பின்பு சாதமாக வடித்து கொள்ளவும்.

3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும். பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

4. அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

5. அதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.

6. சிக்கன் நன்கு வெந்ததும் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

7. பின் மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு, மிளகாய்த்தூள், சோயாசாஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

8. இவற்றை 5 நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும்.

9. இப்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளை அதில் தூவி பரிமாறினால் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார்.

10. இதனுடன் தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...

கீழாநெல்லி மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி கீழாநெல்லி என்பது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகை செடியாகும். இந்த செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வளரும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்தது. கீழாநெல்லி செடி சுமார்...

Riddles with Answers | Puzzles and vidukathaigal

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
கரிசலாங்கன்னி கீரை

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள்...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...
ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி பொது பலன்கள் – ரிஷப ராசி குணங்கள்

ரிஷப ராசி குணங்கள் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவர். ரிஷப ராசியில் கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்களும், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்களும் அடங்கியுள்ளன. ராசிகளில், ரிஷப ராசி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.